Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
ப்ராக்கோலியும், சீஸும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க...
Broccoli Cheese Balls Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சாப்பிட ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் பிள்ளைகளுக்கு சீஸ் பால்ஸ் ரொம்ப பிடிக்குமா? எப்போதும் உருளைக்கிழங்கு கொண்டு மட்டும் சீஸ் பால்ஸ் செய்வீர்களா? அப்படியானால் சற்று வித்தியாசமாக வீட்டில் ப்ராக்கோலி இருந்தால், அவற்றைக் கொண்டும் சீஸ் பால்ஸ் செய்யுங்கள்.
இந்த ப்ராக்கோலி சீஸ் பால்ஸ் மிகவும் ருசியாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். ப்ராக்கோலி சாப்பிட மறுக்கும் உங்கள் பிள்ளைகளை அதை சாப்பிட வைக்க நினைத்தால், இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு ப்ராக்கோலி சீஸ் பால்ஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ராக்கோலி சீஸ் பால்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ப்ராக்கோலி - 1 (வேக வைத்து, துருவியது)
* வேக வைத்த பெரிய உருளைக்கிழங்கு - 1 (மசித்தது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மிக்ஸ்டு ஹெர்ப் - 1 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* கார்லிக் பவுடர் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பிரட் தூள் - 1/4 கப் + தேவையான அளவு
* சோள மாவு - 1/4 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* மொசரெல்லா சீஸ் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ப்ராக்கோலியை சுடுநீரில் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து
எடுத்து, பிளெண்டரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை எடுத்து,
அத்துடன் அரைத்து வைத்துள்ள ப்ராக்கோலியை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, மிக்ஸ்டு ஹெர்ப்ஸ்,
சில்லி ப்ளேக்ஸ், கார்லிக் பவுடர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் 1/4 கப் பிரட் தூளை சேர்த்து, கைகளால் நன்கு
பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் சோள மாவை எடுத்து, நீர் சேர்த்து
கரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து பிசைந்த கலவையை சிறிது எடுத்து உருட்டி, தட்டையாக தட்டி,
நடுவே ஒரு துண்டு சீஸை வைத்து மடித்து உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை சோள மாவில் பிரட்டி, அதன் பின் பிரட் தூளில் உருட்டி, ஒரு
தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும்
உருட்டி செய்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருண்டைகளைப் போட்டு, பொன்னிறமாக ப்ரை
செய்து எடுத்தால், மொறுமொறுப்பான மற்றும் சீஸியான ப்ராக்கோலி சீஸ்
பால்ஸ் தயார்.



Click it and Unblock the Notifications