Latest Updates
-
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
கத்திரிக்காயும், தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு சும்மா சூப்பரா இருக்கும்..
Brinjal Tomato Chutney Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு வித்தியாசமான, அதே சமயம் வேகமாக செய்யக்கூடிய வகையில் ஒரு அற்புதமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் மற்றும் தக்காளி உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அற்புதமான சுவையில் ஒரு சட்னியை செய்யுங்கள்.
இந்த கத்திரிக்காய் தக்காளி சட்னி செய்வது மிகவும் சுலபம் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக வேலை முடிந்து வீட்டிற்கு மிகவும் சோர்வாக வருபவர்கள், இந்த சட்னியை 10 நிமிடத்தில் செய்யலாம். அந்த அளவில் அதிக வேலை இல்லாமல் எளிதில் செய்யக்கூடிய ஒரு சைடு டிஷ்ஷாக இது இருக்கும்.

உங்களுக்கு கத்திரிக்காய் தக்காளி சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கத்திரிக்காய் - 6
* நாட்டுத் தக்காளி - 6
* வரமிளகாய் - 5
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கல் உப்பு - 3/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் கத்திரிக்காயின் தண்டு பகுதியை நீக்கிவிட்டு, அதை நான்கு
துண்டுகளாக வெட்டி, நீரில் போடுங்கள்.
* அதன் பின் வரமிளகாயை எடுத்து, அதை நெருப்பில் சுட்டு எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து தக்காளி நீரில் கழுவி, அவற்றை இரண்டு துண்டுகளாக வெட்டிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் கத்திரிக்காய், வரமிளகாய், தக்காளி மற்றும் உப்பு
ஆகியவற்றை சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, தக்காளியில் உள்ள தோலை நீக்கிவிட
வேண்டும்.
* இறுதியாக மத்து இருந்தால் அதை எடுத்து, குக்கரில் உள்ள பொருட்களை
அப்படியே மசித்து விட வேண்டும். இப்போது சுவையான கத்திரிக்காய்
தக்காளி சட்னி தயார்.
* இந்த சட்னியை தாளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த சட்னி இட்லி,
தோசையுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications