Latest Updates
-
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்..
இட்லி, சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்... கத்திரிக்காய் தொக்கு
உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கத்திரிக்காய் கொண்டு தொக்கு செய்யுங்கள். இந்த கத்திரிக்காய் தொக்கு சப்பாத்தி, இட்லி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
அலுவலகம் முடிந்து வீட்டிற்கு போனதும் நைட் என்ன டின்னர் செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கத்திரிக்காய் கொண்டு தொக்கு செய்யுங்கள். இந்த கத்திரிக்காய் தொக்கு சப்பாத்தி, இட்லி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த கத்திரிக்காய் தொக்கு செய்வது மிகவும் சுலபம். பேச்சுலர்கள் கூட இந்த கத்திரிக்காய் தொக்கு செய்யலாம். இந்த கத்திரிக்காய் தொக்கு சற்று இனிப்பாக இருப்பதால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

கத்திரிக்காயை அடிக்கடி உணவில் சேர்க்கும் போது இதயம் ஆரோக்கியமாக இருக்கும், புற்றுநோயின் அபாயம் குறையும், செரிமானம் மேம்படும், எடை இழப்பிற்கு உதவும், எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும், இரத்த சோகை சரியாகும். இவ்வளவு நன்மைகளைக் கொண்ட கத்திரிக்காயை நீங்கள் அடிக்கடி சாப்பிடமாட்டீர்கள் என்றால், இனிமேலாவது சாப்பிடுங்கள்.
உங்களுக்கு கத்திரிக்காய் கொண்டு எப்படி தொக்கு செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* கத்திரிக்காய் - 2 ( பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் தக்காளியை சேர்த்து சிறிது உப்பு தூவி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கத்திரிக்காயை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்றி, கத்திரிக்காயை நன்கு வேக வைக்க வேண்டும்.
* கத்திரிக்காய் நன்கு மென்மையாக வெந்ததும், அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறி, இறக்கினால், சுவையான கத்திரிக்காய் தொக்கு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications












