Latest Updates
-
1 சௌ சௌ காயும், 5 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
கத்திரிக்காய் தவா ரோஸ்ட்
உங்கள் வீட்டில் கத்திரிக்காய் அதிகம் உள்ளதா? அதைக் கொண்டு ஒரு ருசியான மற்றும் ஈஸியான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் கத்திரிக்காய் தவா ரோஸ்ட் செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் கத்திரிக்காய் அதிகம் உள்ளதா? அதைக் கொண்டு ஒரு ருசியான மற்றும் ஈஸியான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் கத்திரிக்காய் தவா ரோஸ்ட் செய்யுங்கள். இந்த கத்திரிக்காய் தவா ரோஸ்ட் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு கத்திரிக்காய் தவா ரோஸ்ட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் தவா ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கத்திரிக்காய் - 4 (நறுக்கியது)
* பாவ் பாஜி மசாலா - 2-3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் கத்திரிக்காய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு மூடி வைத்து கத்திரிக்காயை வேக வைக்க வேண்டும்.
* கத்திரிக்காய் நன்கு வெந்ததும், அதில் பாவ் பாஜி மசாலாவை சேர்த்து நன்கு சில நிமிடங்கள் கிளறி இறக்கினால், சுவையான கத்திரிக்காய் தவா ரோஸ்ட் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
