Latest Updates
-
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்.. கத்திரிக்காய் மசாலா
இதுவரை முயற்சிக்காத ஒரு சைடு டிஷ்ஷை சப்பாத்திக்கு செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டே ஒரு அசத்தலான கத்திரிக்காய் மசாலாவை செய்து சாப்பிடுங்கள்.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு சைடு டிஷ் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? இன்று சற்று வித்தியாசமாக, இதுவரை முயற்சிக்காத ஒரு சைடு டிஷ்ஷை சப்பாத்திக்கு செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டே ஒரு அசத்தலான கத்திரிக்காய் மசாலாவை செய்து சாப்பிடுங்கள். இந்த மசாலா செய்வது மிகவும் சுலபம். மேலும் பேச்சுலர்கள் செய்யும் வகையில் எளிமையான செய்முறையை கொண்டது.

உங்களுக்கு கத்திரிக்காய் மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கத்திரிக்காய் - 2 (நீளமாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
* புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* சாம்பார் பவுடர் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 சிறிய துண்டு
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 2
* அன்னாசிப்பூ - 1
* பிரியாணி இலை - 2
செய்முறை:
* முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியைப் போட்டு, உப்பு, சர்க்கரை, சாம்பார் பவுடர், கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து கிளறி, தக்காளி நன்கு மென்மையாக வேகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் கத்திரிக்காயை சேர்த்து, புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் 1 கப் நீரை ஊற்றி கிளறி, மிதமான தீயில் வைத்து 8 நிமிடம் வேக வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கத்திரிக்காய் மசாலா தயார்.



Click it and Unblock the Notifications