Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
மொறுமொறுப்பான... பிரட் வடை
உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அந்த பிரட் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட வடையை செய்து வீட்டில் உள்ளோருக்கு கொடுங்கள். இந்த பிரட் வடை வித்தியாசமான சுவையுடன் குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.
மாலை வேளையில் பள்ளி முடிந்து உங்கள் குழந்தைகள் வீட்டிற்கு பசியோடு வந்திருப்பார்கள். அப்படி பசியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு காபி, டீ கொடுக்கும் போது, அவர்களுக்கு ஒரு மொறுமொறுப்பான மற்றும் சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால், அவர்கள் இன்னும் சந்தோஷமடைவார்கள் அல்லவா? சரி, என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அந்த பிரட் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட வடையை செய்து கொடுங்கள். இந்த பிரட் வடை வித்தியாசமான சுவையுடன் குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு பிரட் வடையை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரட் வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 3 துண்டுகள்
* பெரிய கேரட் - 1
* வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 1
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புதினா - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1/2 டீஸ்பூன் (துருவியது)
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* அரிசி மாவு/சோள மாவு/மைதா - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் கேரட்டை துருவிக் கொள்ள வேண்டும். பின்பு பிரட் துண்டுகளை சிறிதாக கையில் துண்டுகளாக்கி போட வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் பிரட் துண்டுகள், துருவிய கேரட், இஞ்சி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு, சீரகம், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் அரிசி மாவு/சோள மாவு/மைதா மாவை சேர்த்து, வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றி, வடை பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் பிசைந்ததை சிறு உருண்டைகளாக உருட்டி, வடை போன்று தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு பொன்னிறமாக முன்னும் பின்னும் பொரித்து எடுத்தால், சுவையான பிரட் வடை தயார்.
Image Courtesy: indianhealthyrecipes



Click it and Unblock the Notifications