Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
4 பிரட்டும், 1 முட்டையும் இருந்தா.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்..
Bread Snacks In Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அந்த பிரட்டை வெறுமனே சாப்பிட கொடுக்காமல், முட்டை மற்றும் பாலுடன் சேர்த்து ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள்.
இந்த பிரட் ஸ்நாக்ஸ் மொறுமொறுவென்று குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த ஸ்நாக்ஸ் 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த பிரட் ஸ்நாக்ஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இந்த பிரட் ஸ்நாக்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 4
* முட்டை - 1
* பால் - 1/4 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* ஆரிகானோ/பிட்சா சீசனிங் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பிரட் துண்டுகளை எடுத்து, அதன் ப்ரௌன் நிற முனைகளை
வெட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் நீக்கிய அந்த
பிரட் பகுதியை மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு பொடித்து ஒரு தட்டில்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பிரட்டின் வெள்ளைப் பகுதியை முக்கோண வடிவில் அல்லது சதுர
வடிவில் வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பௌலில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் பால்,
உப்பு, சர்க்கரை, மஞ்சள் தூள், ஆரிகனோ/பிட்சா சீசனிங், பொடியாக
நறுக்கிய கொத்தமல்லி, மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு
அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பிரட் துண்டை எடுத்து, முட்டை பால் கலவையில் பிரட்டி,
பின் பிரட் தூளில் பிரட்டி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும். இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் பிரட்டி தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட் தூளில் பிரட்டிய பிரட்டுகளை
போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான
மற்றும் மொறுமொறுப்பான பிரட் ஸ்நாக்ஸ் தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications