Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
6 பிரட்டும், 4 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்..
Bread Sandwich Pakoda Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பசங்க சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? அதுவும் வித்தியாசமாக ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் பிரட் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு, பசி அடங்கி வயிறு நிரம்பும்படியான ஒரு பிரட் சாண்விட்ச் பக்கோடாவை செய்து கொடுங்கள்.
இது மிகவும் சுவையாக இருப்பதோடு, 2 துண்டுகள் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிவிடும். அதுவும் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது, இதை செய்து கொடுத்தால், பாராட்டைப் பெறலாம். முக்கியமாக இது ஒரு சிறந்த மழை காலத்தில் சாப்பிட ஏற்ற ஸ்நாக்ஸ் ஆகும்.

உங்களுக்கு இந்த பிரட் சாண்விட்ச் பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரட் சாண்விட்ச் பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
மசாலாவிற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 4 (வேக வைத்தது)
* சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
பக்கோடா மாவிற்கு...
* கடலை மாவு - 1 கப்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* ஓமம் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து,
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரகத் தூள்,
மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து
நன்கு பிரட்டி விட்டு வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சாட் மசாலாவை சேர்த்து, கொத்தமல்லியைத் தூவி 2
நிமிடம் பிரட்டி வேக வைத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு பிரட் துண்டை எடுத்து, அதன் மேல் உருளைக்கிழங்கு
மசாலாவை வைத்து பரப்பி, பின் அதன் மேல் மற்றொரு பிரட் துண்டை வைத்து
அழுத்தி, முக்கோண வடிவில் வெட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள
வேண்டும். இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் செய்து கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் பக்கோடா மாவிற்கு கடலை மாவு, மிளகாய்
தூள், மஞ்சள் தூள், உப்பு, ஓமம் மற்றும் பேக்கிங் சோடாவை சேர்த்து
கிளறி விட வேண்டும்.
* அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, ஓரளவு கெட்டியாக கலந்து
கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், மசாலா வைத்துள்ள பிரட் துண்டுகளை
ஒவ்வொன்றாக எடுத்து, மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு முன்னும்
பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பிரட் சாண்விட்ச்
பக்கோடா தயார்.



Click it and Unblock the Notifications










