Latest Updates
-
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி
10 பிரட் இருந்தா.. ஈவ்னிங் 10 நிமிடத்தில் இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. செமயா இருக்கும்..
Bread Pakoda Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் காபி, டீ குடிக்கும் போது ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? அதுவும் மொறுமொறுவென்று சூடாக சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அந்த பிரட் கொண்டு வித்தியாசமான சுவையில் பக்கோடா செய்து கொடுங்கள்.
இந்த பிரட் பக்கோடா 10 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பிரட் பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரட் பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெங்காயம் - 3 (நீளவாக்கில் வெட்டியது)
* பூண்டு - 6-7
* இஞ்சி - ஒரு துண்டு
* பிரட் - 8-10
* அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டுகுளாக வெட்டிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் பூண்டு மற்றும் இஞ்சியை நன்கு தட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு பிரட் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து நீரில் போட்டு பிரட்டி,
அதில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, ஒரு பாத்திரத்தில்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும்
கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் வெங்காயத்தை சேர்த்து, அத்துமன் மஞ்சள் தூள், மிளகாய்
தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* பின் பச்சை மிளகாயை தட்டிப் போட்டு, நீர் சேர்க்காமல் கைகளால் நன்கு
பிசைந்து வைக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் நன்கு சூடானதும், பிசைந்து வைத்துள்ளதை கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்து எண்ணெயில் கிள்ளி போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,
சுவையான பிரட் பக்கோடா தயார்.
Image Courtesy: Madras Virunthu



Click it and Unblock the Notifications