Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
5 ப்ரெட் இருந்தா இந்த ஸ்பெஷல் போண்டாவை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...!
Bread Masala Bonda Recipe in Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் உங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது வித்தியாசமாக செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அதுவும் எளிதான மற்றும் சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால், ப்ரெட் போண்டா செய்து கொடுங்கள்.
இந்த ப்ரெட் போண்டா, வழக்கமான மசாலா போண்டாவை போன்றே சுவையாகவும், மென்மையாகவும் இருக்கும். ஆனால் இதன் சுவை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இந்த போண்டாவை ஒருமுறை செய்தால், உங்கள் வீட்டில் எல்லோரும் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள், அவ்வளவு சுவையாக இருக்கும்.

உங்களுக்கு சுவையான ப்ரெட் போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ரெட் போண்டாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- ப்ரெட் துண்டுகள் - 5
- உருளைக் கிழங்கு - 2
- நறுக்கிய முட்டைக்கோஸ் - அரை கப்
- கேரட் - 1
- பச்சை பட்டாணி - கால் கப்
- பச்சை மிளகாய் - 3
- பெரிய வெங்காயம் - 2
- பூண்டு - 5 பல்
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
- கருவேப்பிலை - ஒரு கொத்து
- மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
- மிளகுத் தூள் - அரை ஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - அரை ஸ்பூன்
- சீரகம் - அரை ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- பூண்டு மற்றும் வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயத்தின் மேற்பகுதியில் இருக்கும் கருப்பு நிற பூஞ்சையை தண்ணீரில் சுத்தமாக கழுவி கொள்ளவும்.
- பின் பூண்டு மற்றும் வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- உருளைக்கிழங்கை மண் இல்லாமல் சுத்தமாக கழுவி தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, கேரட் மற்றும் முட்டைக்கோஸை சுத்தமாக கழுவி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- பச்சை பட்டாணியை நன்றாக வேக வைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- பின் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விட்டு கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
- அதில் பூண்டு மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு சிவக்கும் வரை வதக்கவும்.
- அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- நறுக்கிய உருளைக் கிழங்கு, முட்டைக்கோஸ், கேரட் மற்றும் வேக வைத்த பச்சை பட்டாணி சேர்க்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து குறைவான தீயில் அடிப்பிடிக்காமல் வேக வைக்கவும்.
- காய்கறிகள் நன்றாக வெந்ததும் மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கி கொள்ளவும்.
- ஓரங்கள் நீக்கி வைத்த பிரெட் துண்டுகளை சிறிது தண்ணீரில் நனைத்த பிழிந்து கொள்ளவும்.
- இப்போது தயார் செய்த மசாலாவை பிரெட் துண்டில் வைத்து நன்கு மூடி உருட்டி வைத்து கொள்ளவும்.
- பின் வாணலியை அடுப்பில் வைத்து பொரிக்க தேவையான அளவு சேர்த்து காய விடவும்.
- அதில் இரண்டு அல்லது மூன்று உருட்டிய உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.
- இதே போல் மீதம் இருக்கும் உருண்டைகளையும் பொரித்து எடுத்தால் சுவையான பிரெட் போண்டா ரெடி!



Click it and Unblock the Notifications