Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
2 உருளைக்கிழங்கும்,10 ப்ரெட்டும் இருந்தா இந்த வித்தியாசமான பஜ்ஜியை சுடுங்க... எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க
Bread Masala Bajji Recipe in Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் உங்கள் குழந்தைகளுக்கு வயிறு நிரம்பும்படி ஒரு டீ டைம் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் குழந்தைகள் பஜ்ஜியை விரும்பி சாப்பிடுவார்களா?வழக்கமான வாழைக்காய் பஜ்ஜி. மிளகாய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி சாப்பிட்டு போரடித்து விட்டதா? அப்படினா ப்ரெட் வைச்சு இந்த மாதிரி ஸ்டப்டு பஜ்ஜி செய்யுங்க.
இந்த ப்ரெட் ஸ்டப்டு பஜ்ஜி ஒரே நேரத்தில் பஜ்ஜியும், மசாலா போண்டாவும் சாப்பிடற மாதிரி வித்தியாசமான சுவையில் சூப்பரா இருக்கும். இந்த வித்தியாசமான பஜ்ஜி செய்ய கொஞ்சம் ப்ரெட் துண்டுகளும், உருளைக்கிழங்கும் இருந்தால் போதும் டக்குனு செஞ்சு வீட்ல எல்லாரையும் அசத்தலாம்.

உங்களுக்கு ஸ்டப்டு ப்ரெட் பஜ்ஜியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்டப்டு ப்ரெட் பஜ்ஜியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- ப்ரெட் துண்டு - 10
- உருளைக்கிழங்கு - 2
- பூண்டு - 4 பல்
- பச்சைமிளகாய் - 2
- வெங்காயம் - 1
- மிளகாய்தூள் - 1/4 ஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
- எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
பஜ்ஜி மாவு செய்ய தேவையானவை:
- கடலைமாவு - 1/2 கப்
- மிளகாய்தூள் - 1/4 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
செய்முறை:
- உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்துக் கொள்ளவும். வாணலியில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் உரித்த உருளைக்கிழங்கு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும்.
- பஜ்ஜி மாவு தயாரிக்க கொடுக்கப்பட்ட பொருட்களோடு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தை விட சற்று தளர்த்தியாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
- ப்ரெட் துண்டுகளை சப்பாத்தி கட்டையில் வைத்து அழுத்தி தேய்த்து மெலிதாக்கிக் கொள்ளவும்.
- மெலிதாக்கிய ப்ரெட்டை முக்கோணமாக இரண்டு துண்டுகளாக வெட்டவும்.
- மெலிதாக்கிய ப்ரெட்டின் மீது உருளைக்கிழங்குக் கலவையை ஒரு மேசைகரண்டி அளவு எடுத்து வைத்து பரப்பி அதன் மீது இன்னொரு ப்ரெட் துண்டை வைத்து மூடி ஓரங்களை அழுத்தி விடவும்.
- இதை பஜ்ஜி மாவில் முக்கி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சூப்பரான ப்ரெட் மசாலா பஜ்ஜி ரெடி.
- மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட இது அருமையான ஸ்னாக்ஸாக இருக்கும்.



Click it and Unblock the Notifications