Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
4 துண்டு பிரெட் இருந்தா போதும்... டக்குனு இந்த மாதிரி இட்லி செஞ்சுருங்க... டின்னருக்கு சூப்பரா இருக்கும்...!
Bread Idli Recipe in Tamil: இட்லி என்பது நம்முடைய ஆஸ்தான உணவாகும். பல நூற்றாண்டுகளாக இட்லி நம்முடைய பிரதான காலை உணவாகவும், இரவு நேர உணவாகவும் இருந்து வருகிறது. இட்லி முக்கியமான உணவாக இருக்க காரணம் அது நீராவியில் வேகவைக்கப்படுவதுதான். இட்லியின் சுவை எப்போதும் அதனுடன் பரிமாறப்படும் சட்னி மற்றும் சாம்பாரின் சுவையின் பொறுத்தே அமைகிறது.
இட்லியில் பல வகைகள் உண்டு. அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப்போவது பிரெட் இட்லி. வழக்கமான இட்லி பொலலம்மால் இந்த இட்லியின் சுவை வித்தியாசமானதாக இருக்கும். வழக்கமான இட்லி சாப்பிட்டு சலித்துப் போனவர்களுக்கு இந்த இட்லி மிகவும் புதிய சுவையில் இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு இது மிகவும் பிடித்ததாக இருக்கும். இந்த பதிவில் பிரெட்டை சேர்த்து எப்படி சூப்பரான இட்லி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- 4 பிரெட்
- 1 கப் இட்லி ரவை
- 1 கப் கெட்டியான புளித்த தயிர்
- ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா
- தண்ணீர் தேவைக்கு ஏற்ப
- உப்பு தேவைக்கு ஏற்ப
- இட்லி தட்டில் தடவ எண்ணெய்
செய்முறை:
- முதலில் பிரெட்டின் சைடில் உள்ளவற்றை வெட்டி எடுத்து விடவும். இதில் வெள்ளை நிறத்தில் வர மிகவும் அவசியம்.
- நறுக்கிய பிரெட் துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தூளாக அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் ஒரு கப் இட்லி ரவையைச் சேர்க்கவும். பின்னர் அதில் 1 கப் தயிர், அரைத்து வைத்த பிரெட் தூள் மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பை சேர்க்கவும்.
- நன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு வரும்படி தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்.
- மாவு வறண்டு போகாமல் இருக்க அதன் மேல் ¼ கப் தண்ணீரைச் சேர்க்கவும். உங்கள் மாவு தண்ணீராக இருந்தாலும் கவலைப்பட வேண்டாம், ஏனெனில் பிரெட் மற்றும் இட்லி ரவை தண்ணீரை உறிஞ்சிவிடும்.
- பின்னர் 20-30 நிமிடங்கள் மாவை அப்படியே வைக்கவும்.
- பின்னர் மீண்டும் மாவை நன்கு கலக்கவும், தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும்.
- வேகவைப்பதற்கு சற்று முன்பு ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவைச் சேர்த்து நுரை வரும் வரை நன்கு கலக்கவும்.
- பேக்கிங் சோடா சேர்த்தவுடன் மாவை அதிக நேரம் வைக்க வேண்டாம். இட்லி தட்டு குழிகளில் எண்ணெய் தடவி மாவை ஊற்றவும்.
- பின்னர் சாதாரண இட்லிகளைப் போல, மிதமான தீயில் 8-10 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். இட்லி வெந்ததும் அடுப்பை அணைத்து தட்டுக்கு மாற்றவும்.
- சூடான இட்லிகளை தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications