Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
ஹோட்டல் ஸ்டைல் பிரெட் அல்வா ரெசிபி... இந்த மாதிரி செஞ்சீங்கனா இனிமே கடைக்கு போகவே மாட்டிங்க...!
Bread Halwa Recipe in Tamil: சமீபத்தில் வேகமாக ட்ரெண்டாகி வரும் இனிப்பு வகை என்றால் அது பிரெட் அல்வாதான். அதற்கு காரணம் நமக்கு பிடித்த ஆத்மார்த்த உணவான பிரியாணிதான். பெரும்பாலான உணவகங்கள் பிரியாணி வாங்கும் போது அதனுடன் பிரெட் அல்வாவை அதனுடன் சேர்த்துக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பிரியாணி சாப்பிட்டவுடன் பிரெட் அல்வா சாப்பிடும் அனுபவமே அலாதிதான்.
பிரியாணியுடன் மட்டுமின்றி இந்த அல்வாவை சும்மாவே செய்து சாப்பிடலாம். பிரெட் அல்வா செய்வது எளிதானதாக கருதப்பட்டாலும் அது வீட்டில் செய்யும்போது ஹோட்டல்களில் கிடைப்பது போன்ற சுவையில் இருக்காது. அந்த குறையைப் போக்க ஹோட்டல்களில் கிடைப்பது போல சுவையாக பிரெட் அல்வாவை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- 3 துண்டுகள் வெள்ளை ரொட்டி
- ½ கப் சர்க்கரை
- 2 கப் பால்
- ½ கப் நெய்
- முந்திரி - 10
- உலர் திராட்சை - 15
- ஏலக்காய்தூள் - 1 ஸ்பூன்
செய்முறை:
- பிரெட் துண்டுகளிலிருந்து சைடில் இருக்கும் பகுதியை அகற்றி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் நெய்யை சூடாக்கி, அதில் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் உலர் திராட்சையையும் நெய்யில் பொன்னிறமாகும் வரை வதக்கவும். இரண்டையும் தனித்தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- இப்போது நறுக்கி வைத்திருந்த பிரெட் துண்டுகளை நெய்யில் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். தேவைப்பட்டால் மேலும் நெய் சேர்த்துக்கொள்ளலாம். பொன்னிறமாகும் வரை நன்கு வறுக்க வேண்டும்.
- பிரெட் நன்கு பொன்னிறமாக வதங்கியதும் அதில் பாலை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பிரெட்டை பாலில் பிசைந்து, அது கரைந்து கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
- சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். சர்க்கரை நன்கு கரையும் வரை தொடர்ந்து கிளறவும். இதற்கு சுமார் 10 நிமிடங்கள் ஆகும்.
- பின்னர் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அதன்பின் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்தால் சுவையான பிரெட் அல்வா ரெடி!
குறிப்புகள்:
- பிரெட் அல்வாவின் நிறம் பிரெட்டை எந்த அளவிற்கு வறுக்கிறோமோ அதைப்பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. எனவே ரொட்டியை தாராளமாக நெய்யில் பொன்னிறமாகவும் மிருதுவாகவும் வறுக்கவும்.
- அல்வா மிகவும் கெட்டியாக இருந்தால் கூடுதல் பால் சேர்த்து கொதிக்க வைத்தால் சுவையும் நன்றாக இருக்கும்.
- பிளைன் கோவாவை சேர்த்து பால் செய்தால் சுவை இன்னும் நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications