Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
Bread Egg Upma Recipe : சுவையான... பிரட் முட்டை உப்புமா
உங்கள் வீட்டில் பிரட் மற்றும் முட்டை உள்ளதா? அப்படியானால் பிரட் முட்டை உப்புமா செய்து கொடுங்கள். இந்த பிரட் முட்டை உப்புமா மாலை வேளையில் சாப்பிட ஏற்ற சுவையான ஸ்நாக்ஸ்.
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் பிரட் மற்றும் முட்டை உள்ளதா? அப்படியானால் பிரட் முட்டை உப்புமா செய்து கொடுங்கள். இந்த பிரட் முட்டை உப்புமா மாலை வேளையில் சாப்பிட ஏற்ற சுவையான ஸ்நாக்ஸ். குறிப்பாக இந்த உப்புமா குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். அதுவும் பிரட் முட்டை உப்புமாவை வீட்டிற்கு விருந்தினர்கள் வரும் போது செய்து கொடுத்தால், அவர்களின் பாராட்டையும் பெறலாம்.

உங்களுக்கு பிரட் முட்டை உப்புமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரட் முட்டை உப்புமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் துண்டுகள் - 4
* முட்டை - 2
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் பிரட் துண்டுகளை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளி, குடைமிளகாய் சேர்த்து தக்காளியின் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் வாணலியில் உள்ள மசாலாவை ஒரு பக்கமாக தள்ளிவிட்டு, பின் முட்டையை சேர்த்து, அதன் மேல் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து முட்டையை நன்கு பொடிமாஸ் போன்று வதக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், பிரட் முட்டை உப்புமா தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications

