Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
வீட்டுல பிரட்டும், உருளைக்கிழங்கும் இருக்கா? இப்படி போண்டா செய்யுங்க.. அருமையா இருக்கும்..
Bread Bonda Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? அதுவும் நன்கு சூடாகவும், காரமாகவும், மொறுமொறுப்பாகவும் சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு மற்றும் பிரட் உள்ளதா?
அப்படியானால் அந்த இரண்டைக் கொண்டும் ஒரு அட்டகாசமான போண்டா செய்யுங்கள். இந்த பிரட் போண்டா செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு பிரட் போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரட் போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் துண்டுகள் - 12
* உருளைக்கிழங்கு - 3
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் குக்கரில் உருளைக்கிழங்கை வெட்டி போட்டு, அந்த கிழங்கு
மூழ்கும் அளவில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி, 3 விசில்
விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து,
உருளைக்கிழங்கை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, ஒரு பாத்திரத்தில்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த உருளைக்கிழங்கை கையால் பிசைந்து விட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து உருளைக்கிழங்கை சேர்த்து, சாம்பார் தூள், கரம் மசாலா,
மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பிரட்டி, 1 டேபிள் ஸ்பூன்
நீரை சேர்த்து கிளறி, 2-3 நிமிடம் மிதமான தீயில் வைத்து கிளறி,
கொத்தமல்லியைத் தூவி இறக்கிட வேண்டும்.
* உருளைக்கிழங்கு ஓரளவு குளிர்ந்ததும், அதை சிறு சிறு உருண்டைகளாக
உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் பிரட் துண்டுகளை எடுத்து, அதன் ப்ரௌன் நிற முனைகளை கத்தியால்
வெட்டி நீக்கி விட வேண்டும். அதன் பின், ஒரு அகலமான பாத்திரத்தில்
சிறிது நீரை ஊற்றி, அதில் ஒரு பிரட் துண்டின் ஒரு பக்கம் நனையும்
வகையில் நீரில் போட்ட உடனே எடுத்துவிட வேண்டும்.
* அடுத்து அந்த பிரட்டின் நடுவே உருளைக்கிழங்கு உருண்டையை வைத்து
போண்டா போன்று பிடிக்க வேண்டும். ஒருவேளை அதில் அதிகப்படியான நீர்
இருந்தால், அதை அப்படியே பிழிந்துவிட வேண்டும். இதேப் போன்று அனைத்து
பிரட் துண்டுகளையும் கொண்டு போண்டாக்களை செய்ய வேண்டும்.
* இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு
தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள போண்டாக்களை
சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பிரட் போண்டா
தயார்.
Image Courtesy: rakskitchen



Click it and Unblock the Notifications









