Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பிரட்டும், தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் நேரத்துல 5 நிமிஷத்துல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க..
Coconut Bread Balls Recipe In Tamil: பள்ளி முடிந்து வீட்டில் பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளின் பசியைப் போக்கும் வகையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? எப்போதும் பஜ்ஜி, போண்டா, வடை என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையுடைய ஸ்நாக்ஸ் செய்து கொடுத்து அவர்களை அசத்த நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் பிரட் மற்றும் தேங்காய் உள்ளதா? அப்படியானால் அந்த பிரட்டையும், தேங்காயையும் கொண்டு அற்புதமான சுவையில் ஒரு மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். இந்த தேங்காய் பிரட் பால்ஸ் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது இப்படியான ஸ்நாக்ஸை செய்து கொடுத்தால், நல்ல பாராட்டைப் பெறலாம்.

உங்களுக்கு தேங்காய் பிரட் பால்ஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் பிரட் பால்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 6 துண்டு
* தேங்காய் - 1/4 மூடி
* நாட்டுச்சர்க்கரை - 2 1/2 டீஸ்பூன்
* பாதாம் - 6
* முந்திரி - 6
* காய்ச்சி ஆற வைத்த பால் - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பிரட் துண்டுகளை சேர்த்து, நன்கு
பொடித்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே ஜாரில் தேங்காய் துண்டுகளை சேர்த்து, கொரகொரவென்று
அரைத்து, அதையும் பிரட் தூளுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய முந்திரி மற்றும் பாதாமை சேர்த்து
கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்றி,
சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில்
வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருண்டைகளைப் போட்டு, மிதமான தீயில்
வைத்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான தேங்காய் பிரட் பால்ஸ்
தயார்.



Click it and Unblock the Notifications