Latest Updates
-
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சுரைக்காயை வெச்சு எப்பவும் சாம்பார் செய்யாம.. ஒருடைம் இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செஞ்சு சாப்பிட்டு பாருங்க..
Surakkai Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? இந்த இட்லி, தோசைக்கு வழக்கமாக செய்யும் சட்னியை செய்யாமல், சற்று வித்தியாசமான, அதே சமயம் உடலுக்கு நல்ல சத்தை வழங்கக்கூடிய சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா?அப்படியானால் அந்த சுரைக்காய் கொண்டு சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு சுரைக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சுரைக்காய் - 250 கிராம்
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
* பூண்டு - 15 பல்
* வரமிளகாய் - 3
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, அதை பொடியாக நறுக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, மிளகு, சீரகம் சேர்த்து
நன்கு தாளிக்க வேண்டும்.
* பின்பு அத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, வரமிளகாய் சேர்த்து நன்கு
வெங்காயத்தின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள சுரைக்காயை சேர்த்து நிறம்
மாறும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, சற்று கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான சுரைக்காய் சட்னி
தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











