Latest Updates
-
ஆடி அமாவாசை ஸ்பெஷல் தலவாழை படையல் மெனு - என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அரைச்சுவிட்ட பூசணிக்காய் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
சொரியாசிஸ் பற்றி ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட டாக்டர்! -
உலகம் முழுவதும் டாக்டர்கள் வெள்ளை நிற கோட் அணிவதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
கோதுமை முட்டை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா?
அட்டகாசமான கருப்பு சுண்டல் குழம்பு ரெசிபி... செஞ்சு பாருங்க... டேஸ்ட்ல கறிக்குழம்பே தோத்து போயிரும்...!
Black Chana Masala Recipe in Tamil: காலை மற்றும் இரவு உணவுகளைப் பொறுத்தவரை என்ன சமைக்கிறோம் என்பதை விட அதற்கு என்ன சைடிஷ் செய்வது என்பதே மிகப்பெரிய கவலையாக இருக்கும். பொதுவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கு சட்னி அல்லது குருமா போன்றவற்றைத்தான் செய்வோம். ஆனால் எத்தனை நாளுக்குத்தான் அதையே செய்து கொண்டிருப்பது.
புதியதாக ஏதாவது செய்ய விரும்புகிறவர்கள் கருப்பு கொண்டைக்கடலை குழம்பு செய்யலாம். காரசாரமான இந்த குழம்பு இட்லி, தோசை மற்றும் இடியாப்பம் போன்றவற்றுக்கு மட்டுமின்றி தாளித்த சாத வகைகளுக்கு அருமையாக இருக்கும். இந்த பதிவில் இந்த சூப்பரான கருப்பு கொண்டைக்கடலை குழம்பை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்
- பெரிய வெங்காயம் - 3
- தக்காளி - 3
- இஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன்
- மல்லித்தூள் - 2 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- சீரகத்தூள் - அரை ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
- மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 5 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
அரைக்க:
- தேங்காய் துருவல் - அரை கப்
- முந்திரி பருப்பு - 10
- பட்டை - 2 துண்டு
- ஏலக்காய் - 3
- கிராம்பு - 3
- பிரியாணி இலை - 1
- சோம்பு - கால் ஸ்பூன்
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
செய்முறை:
- கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து உப்பு போட்டு நான்கு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும் அல்லது இரவே ஊறவைத்து விடவும்.
- அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பச்சை வாசனை போனவுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள் ,மஞ்சள்தூள், சீரகத்தூள் சிறிது உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.
- பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
- அதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கடாயை மூடி அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து தக்காளியை நன்கு குழையும் படி விடவும்.
- தக்காளி நன்கு மசிந்து கிரேவி பதம் வந்தவுடன் வேகவைத்த கொண்டைக்கடலையை அதன் தண்ணீரோடு ஊற்றவும்.
- பின்பு அரைத்த தேங்காய் விழுது தேவையான அளவுக்கு உப்பு அதனுடன் கரம் மசாலா தூள் , மிளகுத்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு கடாயை மூடி அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
- கிரேவி கெட்டியாகி எண்ணெய் மேலே வந்தவுடன் மல்லித்தழை தூவி இறக்கினால் மிகவும் சுவையான கொண்டைக்கடலை கறி குழம்பு ரெடி.
- இந்த குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம் மற்றும் தாளித்த சாதம் அனைத்துக்கும் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications