Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
கசப்பே இல்லாத பாவக்காய் வறுவல் - சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா?
Pavakkai Varuval Recipe In Tamil: உங்கள் வீட்டில் இருப்பவர்கள் பாவக்காய் என்றால் அலறி அடித்து ஓடுவார்களா? எப்படி பாவக்காயை செய்தாலும் சாப்பிட மறுப்பார்களா? அப்படிப்பட்டவர்களை பாவக்காய் சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் பாவக்காயை இந்த பக்குவத்தில் வறுவல் செய்யுங்கள்.
இந்த ஸ்டைலில் பாவக்காய் வறுவல் செய்யும் போது, அதில் கசப்பு எதுவும் தெரியாது மற்றும் மிகவும் ருசியாகவும் இருக்கும். அதுவும் இப்படி பாவக்காய் வறுவலை செய்தால், அது சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக குழந்தைகள் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

கசப்புச் சுவை நிறைந்த பாவக்காய் உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது. முக்கியமாக இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளன. முக்கியமாக இது சருமத்திற்கு நல்லது, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்த பெரிதும் உதவி புரியும். இந்த பாவக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள கசப்புத்தன்மையால் புழுக்கள் அழிந்து வெளியேறும்.
உங்களுக்கு கசப்பே இல்லாத பாவக்காய் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கசப்பு இல்லாத பாவக்காய் வறுவல் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* பாவக்காய் - 300 கிராம்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாவக்காயின் விதைகளை நீக்கிவிட்டு, மெல்லிய நீள
துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் நறுக்கிய பாவக்காயுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து
கைகளால் பிசைந்து விட்டு, மூடி வைத்து 1/2 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* 1/2 மணிநேரம் கழித்து, மூடியைத் திறந்து, பாவக்காயை பிழிந்து, அதில்
உள்ள நீரை வெளியேற்ற வேண்டும். இதனால் அதில் உள்ள கசப்புத்தன்மை
குறையும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு
பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பாவக்காயை சேர்த்து நன்கு கிளறி விட்டு மூடி வைத்து
10 நிமிடம் பாவக்காயை வேக வைக்க வேண்டும்.
* பாவக்காய் நன்கு வெந்ததும், அதில் மிளகாய் தூள் மற்றும் மல்லித்
தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு, 15 நிமிடம் நன்கு மொறுமொறுவென்று
வரும் வரை ப்ரை செய்து இறக்கினால், சுவையான பாவக்காய் வறுவல்
தயார்.



Click it and Unblock the Notifications