Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்.. வெண்டைக்காய் பாதாம் மசாலா!
உங்கள் வீட்டில் வெண்டைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த வெண்டைக்காய் கொண்டு ஒரு சுவையான சைடு டிஷ் செய்யுங்கள். அது தான் வெண்டைக்காய் பாதாம் மசாலா.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வித்தியாசமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் வெண்டைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த வெண்டைக்காய் கொண்டு ஒரு சுவையான சைடு டிஷ் செய்யுங்கள். அது தான் வெண்டைக்காய் பாதாம் மசாலா. இந்த மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, புல்கா, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு வெண்டைக்காய் பாதாம் மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் பாதாம் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெண்டைக்காய் - 15
* பாதாம் - 8
* ஏலக்காய் - 1
* சோம்பு பொடி - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* தக்காளி - 2
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1/2 டீஸ்பூன்
* பிரஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்
* பால் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் பாதாமை சுடுநீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் துடைத்துவிட்டு, நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வெங்காயம், பாதாம், சோம்புத் தூள், இஞ்சி, கசூரி மெத்தி மற்றும் ஏலக்காய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து, சிறிது உப்பு தூவி, பிசுபிசுத்தன்மை போகும் வரை நன்கு வதக்கி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த மசாலாவை சேர்த்து குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் வதக்க வேண்டும். அதற்குள் தக்காளியை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த தக்காளியை வாணலியில் வதங்கிக் கொண்டிருக்கும் மசாலாவுடன் ஊற்றி, குறைவான தீயில் வைத்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அடிபிடிப்பது போன்று இருந்தால், சிறிது நீரை ஊற்றிக் கொள்ளுங்கள்.
* அடுத்து வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து கிளற வேண்டும்.
* பின் பாலை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு, பின்பு பிரஷ் க்ரீம் சேர்த்து கிளறி, 30 நொடிகள் கொதிக்க விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான வெண்டைக்காய் பாதாம் மசாலா தயார்.
Image Courtesy: jeyashriskitchen



Click it and Unblock the Notifications
