For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாவை ஊறச் செய்யும் கடலை மாவு லட்டு எப்படி தயாரிப்பது?

பேசன் லட்டு எனப்படும் கடலை மாவு ரெசிபி வட இந்தியாவில் செய்யப்படும் சுவையான இனிப்பு வகைகளில் ஒன்று. அதனை தயாரிக்கும் முறையை காணொளியில் கண்டு நீங்களும் கற்றுக் கொள்ளலாம்.

Posted By: Suganthi Ramachandran
|

பேசன் ஹா லட்டு வட இந்தியாவில் எல்லா பண்டிகையின் போதும் விரும்பி செய்யப்படும் இனிப்பு வகை ஆகும். இந்த சுவை மிகுந்த ருசியான லட்டு கடலை மாவை நெய்யில் வறுத்து அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் மற்றும் உலர்ந்த பழங்கள் சேர்த்து கலர்புல்லாக செய்யும் ரெசிபி ஆகும்.

பேசன் ஹா லட்டு நமது தமிழ்நாட்டில் கடலை மாவு உருண்டை என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக எல்லா சுப நிகழ்ச்சிகளின் போதும் பரிமாறி மகிழ்வர். நாக்கில் எச்சி ஊற வைக்கும் இந்த ஸ்வீட் எளிதாகவும் விரைவாகவும் வீட்டிலேயே குறைந்த சமையல் நேரத்தில் செய்து அசத்திடலாம். எனவே இது உங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற இனிப்பு வகை ஆகும்.

இந்த பேசன் ஹா லட்டு பார்ப்பதற்கு மிகவும் கலர்புல்லாக மென்மையாக இருப்பதோடு அதன் நெய் சொட்டும் நறுமணமும் மீண்டும் மீண்டும் கடித்து சுவைக்க தூண்டும். இந்த லட்டை அட்டகாசமாக வீட்டிலேயே செய்வதற்கு தேவையான செய்முறை விளக்கங்களும் மற்றும் வீடியோ செய்முறை விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பேசன் லட்டு ரெசிபி வீடியோ

பேசன் லட்டு ரெசிபி
பேசன் லட்டூ ரெசிபி /பேசன் ஹா லட்டு செய்வது எப்படி பேசன் லட்டு ரெசிபி
Prep Time
5 Mins
Cook Time
5M
Total Time
35 Mins

Recipe By: மீனா பந்தரி

Recipe Type: ஸ்வீட்ஸ்

Serves: 8 லட்டுகள்

Ingredients
  • பொடித்த சர்க்கரை - 1 கப்

    கடலை மாவு - 2 கப்

    நெய் - 3/4 கப்

    தண்ணீர் - 3 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் பொடி - சிறுதளவு

    நறுக்கிய பாதாம் பருப்பு (அலங்கரிக்க) - 1 டேபிள் ஸ்பூன்

    நறுக்கிய பிஸ்தா பருப்பு (அலங்கரிக்க) - 1 டேபிள் ஸ்பூன்

Red Rice Kanda Poha
How to Prepare
  • 1. சூடான ஒரு கடாயில் நெய்யை ஊற்ற வேண்டும்

    2. தீயை மிதமான சூட்டில் வைத்து கொண்டு கடலை மாவை போட்டு நன்றாக கிளறவும். அப்பொழுது தான் கருகுவதை தவிர்க்க முடியும்

    3. பிறகு மாவின் கலரும் அதன் பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 10 நிமிடங்களாவது தண்ணீர் சேர்த்து சமைக்க வேண்டும்

    4. லேசாக தண்ணீர் சேர்த்து அது நுரை நுரையாக தண்ணீர் மேலே எழும்பும் வரை சமைக்க வேண்டும்

    5. அந்த தண்ணீர் மறையும் வரை நன்றாக கலக்க வேண்டும்

    6. அதை இன்னொரு பெளலில் எடுத்து வைத்து 10 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும்.

    7. இதனுடன் பொடி செய்த சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும்

    8. பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்

    9. இதனுடன் நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் பிஸ்தா பருப்பு சேர்த்து நன்கு கலக்கவும்

    10. இந்த கலவையை 10 நிமிடங்களுக்கு பிரிட்ஜில் வைக்க வேண்டும்

    11. பிறகு அதை எடுத்து சமமான அளவில் லட்டு மாதிரி உருண்டை பிடிக்க வேண்டும்

    12. அதன் நடுவில் நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் பிஸ்தா பருப்பை வைத்து அலங்கரிக்கவும்.

Instructions
  • 1.கடலை மாவு மற்றும் நெய் சரியான அளவில் இருந்தால் தான் சரியான லட்டு பதம் கிடைக்கும்.
  • 2.ஏலக்காய் பொடி சேர்த்தவுடன் லட்டுகள் பிடிப்பதற்கு வலுவாக இருந்தால் உள்ளங்கைகளில் கொஞ்சம் நெய் தடவிக் கொள்ளவும்.
Nutritional Information
  • பரிமாறும் அளவு - 1 லட்டு
  • கலோரிகள் - 135 கலோரிகள்
  • கொழுப்பு - 7 கிராம்
  • புரோட்டீன் - 7 கிராம்
  • கார்போஹைட்ரேட் - 29 கிராம்
  • சுகர் - 12 கிராம்
  • நார்ச்சத்து - 6 கிராம்

படிப்படியான செய்முறை விளக்கம் : பேசன் ஹா லட்டு செய்வது எப்படி

1. சூடான ஒரு கடாயில் நெய்யை ஊற்ற வேண்டும்

2. தீயை மிதமான சூட்டில் வைத்து கொண்டு கடலை மாவை போட்டு நன்றாக கிளறவும். அப்பொழுது தான் கருகுவதை தவிர்க்க முடியும்

3. பிறகு மாவின் கலரும் அதன் பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 10 நிமிடங்களாவது தண்ணீர் சேர்த்து சமைக்க வேண்டும்

4. லேசாக தண்ணீர் சேர்த்து அது நுரை நுரையாக தண்ணீர் மேலே எழும்பும் வரை சமைக்க வேண்டும்

5. அந்த தண்ணீர் மறையும் வரை நன்றாக கலக்க வேண்டும்

6. அதை இன்னொரு பெளலில் எடுத்து வைத்து 10 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும்.

7. இதனுடன் பொடி செய்த சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும்

8. பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்

9. இதனுடன் நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் பிஸ்தா பருப்பு சேர்த்து நன்கு கலக்கவும்

10. இந்த கலவையை 10 நிமிடங்களுக்கு பிரிட்ஜில் வைக்க வேண்டும்

11. பிறகு அதை எடுத்து சமமான அளவில் லட்டு மாதிரி உருண்டை பிடிக்க வேண்டும்

12. அதன் நடுவில் நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் பிஸ்தா பருப்பை வைத்து அலங்கரிக்கவும்.

[ 4 of 5 - 79 Users]
English summary

பேசன் லட்டு ரெசிபி | பேசன் லட்டு காணொளி | எளிய இனிப்பு ரெசிபி | கடலை மாவு லட்டு

Besan ladoo is a popular North Indian sweet that is traditionally prepared for almost all festivals. This delectable sweet is made by roasting besan in ghee and adding powdered sugar, cardamom powder and dry fruits.
Desktop Bottom Promotion