Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது..
பெங்களூரு ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி
கத்திரிக்காய் கிரேவி பிரியாணிக்கு மட்டுமின்றி புலாவ், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் சூப்பராக இருக்கும். அதுவும் பெங்களூரு ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி இனிப்பும், புளிப்பும் கலந்து சூப்பராக இருக்கும்.
பிரியாணிக்கு நல்ல சைடு டிஷ் என்றால் அது கத்திரிக்காய் கிரேவி தான். பெரும்பாலும் இந்த கத்திரிக்காய் கிரேவியை கடைகளில் தான் வாங்கி சுவைத்திருப்பீர்கள். ஆனால் அந்த கத்திரிக்காய் கிரேவியை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். கத்திரிக்காய் கிரேவி பிரியாணிக்கு மட்டுமின்றி புலாவ், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் சூப்பராக இருக்கும். அதுவும் பெங்களூரு ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி இனிப்பும், புளிப்பும் கலந்து சூப்பராக இருக்கும்.

உங்களுக்கு பெங்களூரு ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பெங்களூரு ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
தேவையான பொருட்கள்:
* பெரிய கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 4 (நறுக்கியது)
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* புளி - 20 கிராம் (சுடுநீரில் ஊற வைத்தது)
* கடுகு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* நாட்டுச் சர்க்கரை - 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் புளியை சுடுநீரில் 20 நிமிடம் ஊற வைத்து, நன்கு பிசைந்து 1/24 கப் சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு வெங்காயத்தை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதே மிக்சர் ஜாரில் தக்காளியைப் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கத்திரிக்காயை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். கத்திரிக்காயின் தோல் ப்ரௌன் நிறத்தில் மாறியதும், அதை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் மீண்டும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, மிளகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காய பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சில நிமிடங்கள் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அரைத்த தக்காளி, புளிச்சாறு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 15 நிமிடம் குறைவான தீயில் நன்கு வேக வைக்க வேண்டும்.
* பிறகு மூடியைத் திறந்து, அதில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, வதக்கி வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, கத்திரிக்காயை நன்கு வேக வைக்க வேண்டும். கத்திரிக்காய் நன்கு வெந்ததும் இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பெங்களூரு ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications
