Latest Updates
-
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்..
மொறுமொறுப்பான... பீட்ரூட் வடை
மாலை வேளையில் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா? அப்படியானால் அந்த பீட்ரூட்டை
மாலை வேளையில் வீட்டில் உள்ளோர் மொறுமொறுப்பாகவும், சூடாகவும் ஏதேனும் சாப்பிட கேட்கிறார்களா? அவர்களுக்கு வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா? அப்படியானால் அந்த பீட்ரூட்டைக் கொண்டு வடை செய்து கொடுங்கள். இந்த பீட்ரூட் வரை செய்வது மிகவும் சுலபம். மேலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு பீட்ரூட் வடை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துருவிய பீட்ருட் - 1 கப்
* கடலை பருப்பு - 1/2 கப்
* அரிசி மாவு - 1/2 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4-5
* துருவிய இஞ்சி - 1/2 டீஸ்பூன்
* துருவிய பூண்டு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கடலைப்பருப்பை சுடுநீரில் 30 நிமிடம் ஊற வைத்து, பின் மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே மிக்சர் ஜாரில் சோம்பு, வரமிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து ஒருமுறை லேசாக அரைத்து, அதை அரைத்த கடலைப் பருப்புடன் சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் அரிசி மாவு, துருவிய பீட்ருட், வெங்காயம், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சற்று வடை பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அதே வேளையில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* அதன் பின் வடைக்கு தயாரித்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக எடுத்து தட்டையாக தட்டி, எண்ணெயில் போடடு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பீட்ரூட் வடை தயார்.



Click it and Unblock the Notifications