Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை!
1/4 கப் துவரம் பருப்பும், 1 பீட்ரூட்டும் இருந்தா இந்த ஸ்னாக்கை செய்யுங்க... சுவையா, ஆரோக்கியமா இருக்கும்...!
Beetroot Vada Recipe in Tamil: மாலை வேளையில் பலருக்கும் காபி, டீ குடிக்கும் போது சூடாகவும், காரமாகவும் ஏதாவது சாப்பிடத் தோன்றும். அப்படி தோன்றும் போது பலரது மனதிலும் முதலில் பஜ்ஜி, வடை சாப்பிட தான் ஆசை எழும். அதுவும் நீங்கள் மசாலா வடை பிரியர் என்றால், நிச்சயமாக உங்களுக்கு மசாலா வடை பிடிக்கும். ஆனால் எவ்வளவு நாள்தான் ஒரே மாதிரியான வடை செய்வீர்கள், கொஞ்சம் வித்தியாசமான அதேசமயம் ஆரோக்கியமான வடையை சாப்பிட விரும்புகிறீர்களா?
ஆம், எனில் பீட்ரூட்டை வைத்து இந்த சுவையான வடையை செய்ய முயற்சி செய்யுங்கள். பீட்ரூட்டில் போலேட், பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. எனவே பீட்ரூட்டை வைத்து இதுபோல வடை செய்வது சுவையாக இருப்பதுடன் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்கும். குறிப்பாக இதுபோல பீட்ரூட்டை வடையாக செய்து கொடுத்தால் பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகள் கூட அதை விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பீட்ரூட் வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் வடையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- துவரம் பருப்பு - 1/4 கப்
- கடலை பருப்பு - 1/2 கப்
- வர மிளகாய் - 5
- சோம்பு - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- இஞ்சி - சிறிய துண்டு
- பெரிய வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 2
- பீட்ருட் - 1
- கறிவேப்பிலை - சிறிதளவு
- எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
- பெரிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பீட்ரூட்டை நன்றாக கழுவி தோல் சீவி விட்டு துருவி வைத்துக் கொள்ளவும்.
- துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பை சுத்தமாக கழுவி விட்டு இரண்டு மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
- பருப்பு வகைகள் நன்றாக ஊறியதும் மிக்சியில் போட்டு, அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
- பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, நைசாக துருவிய பீட்ருட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடேறியதும், பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து சிறிய சிறிய வடையாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பீட்ருட் வடை தயார்.



Click it and Unblock the Notifications