Just In
- 8 min ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 36 min ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 4 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
Don't Miss
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Movies சச்சின் டெண்டுல்கர் மகளுக்கே அல்லு அர்ஜுனை புடிச்சிருக்கே.. மெழுகு சிலை போட்டோவுடன் வெளியான போஸ்ட்!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஈஸியான... பீட்ரூட் அல்வா
உங்கள் வீட்டில் பீட்ரூட் அதிகமாக உள்ளதா? உங்கள் குழந்தைகள் மாலை வேளையில் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? அதுவும் ஸ்வீட் சாப்பிட கேட்டால், வீட்டில் உள்ள பீட்ரூட்டைக் கொண்டு ஒரு சுவையான பீட்ரூட் அல்வா செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் பீட்ரூட் அதிகமாக உள்ளதா? உங்கள் குழந்தைகள் மாலை வேளையில் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? அதுவும் ஸ்வீட் சாப்பிட கேட்டால், வீட்டில் உள்ள பீட்ரூட்டைக் கொண்டு ஒரு சுவையான பீட்ரூட் அல்வா செய்யுங்கள். இந்த பீட்ரூட் அல்வா செய்வது மிகவும் ஈஸி. அதோடு இதை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது செய்து கொடுத்தால், அவர்களை அசத்திவிடலாம்.
உங்களுக்கு பீட்ரூட் அல்வா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் அல்வா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பீட்ரூட் - 2 (தோல் நீக்கி, துருவியது)
* நெய் - 1 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்
* பால் - 1 கப்
* சர்க்கரை - 1/2 கப் முதல் 3/4 ப்
* முந்திரி - 1 கையளவு
* உலர் திராட்சை - 1 கையளவு
* ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பீட்ரூட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் பால் ஊற்றி குக்கரை மூடி 2 விசில் விட்டு, தீயைக் குறைத்து 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் உள்ள நெய்யில் குக்கரில் உள்ள பீட்ரூட்டை பாலுடன் ஊற்றி, ஏலக்காய் பொடி சேர்த்து பால் வற்றும் வரை நன்கு கிளற வேண்டும்.
* பால் வற்றியதும் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளற வேண்டும். அப்படி கிளறும் போது, பீட்ரூட் வாணலியில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வரும்.
* இந்நிலையில் மீதமுள்ள நெய் ஊற்றி நன்கு கிளறி, வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து மீண்டும் ஒருமுறை கிளறி இறக்கினால், பீட்ரூட் அல்வா தயார்.
Image Courtesy: yummytummyaarthi