Latest Updates
-
அக்டோபர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கப் போகுதாம் -
நவம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உருளைக்கிழங்கு குலாப் ஜாமூன் ரெசிபி - இந்த தீபாவளிக்கு இதை செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
2026-ல் உலகின் மிகவும் ஆபத்தான டாப் 10 நாடுகள் - இந்த நாடுகளில் மக்கள் வாழ்வதே ரொம்ப கஷ்டம் -
உங்க பிறந்த தேதி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
சூரியன் விருச்சிக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா -
முட்டையை இந்த மாதிரி வித்தியாசமா புலாவ் செஞ்சு பாருங்க - மட்டன் பிரியாணியை விட அட்டகாசமாக இருக்கும் -
இந்திய சினிமாவின் பிறப்பிடம் என்று அழைக்கப்படும் நகரம் எது? இந்திய சினிமாவின் தந்தை யார் தெரியுமா? -
1/2 கிலோ மட்டன் வாங்குனா இந்த மாதிரி கிராமத்து ஸ்டைலில் பச்சை மிளகாய் தொக்கு செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
3/4 கிலோ சிக்கனை வாங்குனா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்..
பீட்ரூட் வெச்சு ஒருடைம் இந்த சட்னியை ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Beetroot Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் எப்போதும் காலை வேளையில் இட்லி அல்லது தோசை தான் செய்வீர்களா? அதற்கு எப்போதும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி என்று தான் செய்வீர்களா? தினமும் இப்படி ஒரே மாதிரியான சட்னி செய்து போடிக்குதா? சற்று வித்தியாசமான சுவையில் சட்னி செய்ய விரும்புகிறீர்களா?
வீட்டில் பீட்ரூட் உள்ளதா? இதுவரை பீட்ரூட் வைத்து பொரியல் தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் இந்த பீட்ரூட கொண்டு அருமையான சுவையில் சட்னி செய்யலாம் தெரியுமா? இந்த பீட்ரூட் சட்னி இட்லி, தோசை, சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி சட்டென்று 5 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு இந்த பீட்ரூட் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பீட்ரூட் - 1
* பச்சை மிளகாய் - 2
* புதினா - சிறிது
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை - பாதி
* துருவிய தேங்காய் - 1/4 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் பீட்ரூட்டின் தோலை நீக்கிவிட்டு, அதை பொடியாக நறுக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் நறுக்கிய பீட்ரூட், பச்சை மிளகாய், புதினா,
சுவைக்கேற்ப உப்பு, கொத்தமல்லி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பாதி எலுமிச்சையின் சாற்றினை பிழிந்துவிட்டு, அத்துடன்
துருவிய தேங்காயை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து
சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பீட்ரூட் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
