Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஹோட்டல் ஸ்டைல் பீட்ரூட் சன்னா பொரியல் - சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா?
Beetroot Chana Poriyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியான பொரியல் செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமாக, அதுவும் ஹோட்டலில் கொடுக்கப்படும் பொரியல் போன்று ஏதாவது செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பீட்ரூட் சன்னா பொரியலை செய்யுங்கள். இந்த பீட்ரூட் சன்னா பொரியலை நிறைய ஹோட்டல்களில் கொடுப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இது மிகவும் சுவையாக இருக்கும்.
அதுவும் இதில் கொண்டைக்கடலையுடன், பீட்ரூட் சேர்ப்பதால், சுவையானது மட்டுமின்றி சத்தானதும் கூட. முக்கியமாக இதை புரோட்டீன் நிறைந்த பொரியல் என்றும் சொல்லலாம். இந்த பொரியலை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த பொரியல் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் பீட்ரூட் சன்னா பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் சன்னா பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கொண்டைக்கடலை - 1/2 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* பீட்ரூட் - 1 (பொடியாக நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 3
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் கொண்டைக்கடலையை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரில் ஊற வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து, அத்துடன்
தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அடுப்பில்
வைத்து நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், பீட்ரூட்டை சேர்த்து, குக்கரை
மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின்பு விசில் போனதும் குக்கரைத் திறந்து, நீரை வடிகட்டிவிட
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், புளி,
கடுகு, சீரகம் சேர்த்து கொரகொரவென்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி
சூடானதும், 1/2 டீஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1
கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்ததை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்த கொண்டைக்கடலை மற்றும் பீட்ரூட்டை சேர்த்து
1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் குறைவான தீயில் வைத்து, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைத்து
இறக்கினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் பீட்ரூட் சன்னா பொரியல்
தயார்.



Click it and Unblock the Notifications