Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சப்பாத்திக்கு பீன்ஸ் வெச்சு இப்படி ஒரு சைடு டிஷ் செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்...
Beans Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் இரவு நேரத்தில் பெரும்பாலும் சப்பாத்தி தான் செய்வீர்களா? இப்படி தினமும் சப்பாத்தி செய்வதால், அதற்கு சைடு டிஷ்ஷை முடிவு செய்வது என்பது கடினமாக உள்ளதா? உங்கள் வீட்டில் பீன்ஸ் உள்ளதா? ஆனால் அந்த பீன்ஸை உங்கள் வீட்டில் யாரும் சாப்பிடமாட்டார்களா?அப்படியே அதை சமைத்தாலும் ஒதுக்கிவிடுவார்களா?
அப்படியானால் அவர்களுக்கு பீன்ஸை கொண்டு மசாலா செய்து கொடுங்கள். இந்த பீன்ஸ் மசாலா சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். ஒருமுறை இப்படி பீன்ஸ் மசாலா செய்தால், பீன்ஸ் பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக அடிக்கடி இந்த பீன்ஸ் மசாலாவை செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு பீன்ஸ் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீன்ஸ் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* புதினா - சிறிது
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பீன்ஸ் - 150 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* தண்ணீர் - சிறிது
* தயிர் - 5 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, புதினா
ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, நன்கு பச்சை வாசனை
போகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள்
தூள் ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு பச்சை வாசனை
போக மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் துண்டுகளாக்கி வைத்துள்ள பீன்ஸை சேர்த்து 2 நிமிடம்
வதக்க வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் மிதமான
தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் 5 டேபிள் ஸ்பூன் தயிரை
ஊற்றி நன்கு கிளறி, வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றி, உப்பு சுவை
பார்த்து, வேண்டுமென்றால் உப்பு சேர்த்து கலந்து, 5 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான பீன்ஸ் மசாலா
தயார்.



Click it and Unblock the Notifications