Latest Updates
-
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பார்பிக்யூ நேஷன் ஸ்டைல் கிரிஸ்பி கார்ன்
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் கார்ன் இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான பார்பிக்யூ நேஷன் ஸ்டைல் கிரிஸ்பி கார்ன் செய்து கொடுங்கள்.
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் கார்ன் இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அதன் பெயர் தான் பார்பிக்யூ நேஷன் ஸ்டைல் கிரிஸ்பி கார்ன். இது நன்கு மொறுமொறுப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு பார்பிக்யூ நேஷன் ஸ்டைல் கிரிஸ்பி கார்ன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பார்பிக்யூ நேஷன் ஸ்டைல் கிரிஸ்பி கார்ன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கார்ன் - 1 கப்
* தண்ணீர் - 2 கப்
* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - 1 டேபிள் பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
மசாலா பொடிகள்...
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/8 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1/3 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் மசாலா பொடிகள் அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் கார்ன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு குளிர்ந்த நீரால் ஒருமுறை அலசி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட வேண்டும்.
* பின் அதை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் அரிசி மாவு, சோள மாவு சேர்த்து கரண்டியால் கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் உள்ள அதிகப்படியான மாவை குலுக்கி வெளியேற்ற வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் நன்கு சூடானதும், அதில் சிறிது கார்னை சேர்த்து மூடி வைத்து சில நொடிகள் வேக வைத்து, பின் மூடியைத் திறந்து ஒருமுறை நன்கு கிளறி விட்டு எடுக்க வேண்டும். இதேப் போல் மீதமுள்ள கார்னையும் சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும்.
* இறுதியாக வறுத்த கார்னை ஒரு பௌலில் போட்டு, அதில் கலந்து வைத்துள்ள மசாலா பொடி, வெங்காயம், கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து, ஒருமுறை கிளறிவிட்டால், சுவையான பார்பிக்யூ நேஷன் ஸ்டைல் கிரிஸ்பி கார்ன் தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications