Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
பெங்களூர் ஹோட்டல் தேங்காய் சட்னி ரெசிபி... சட்னியில் இட்லி மிதக்கும் இந்த சட்னி பார்க்கவே செமயா இருக்கும்...!
Bangalore Hotel Style Coconut Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு சிறந்த சைடிஷ் என்றால் அது தேங்காய் சட்னிதான். தேங்காய் சட்னி எவ்வளவு சுவையானதோ அதேயளவிற்கு செய்வதற்கு எளிமையானதும் கூட. தேங்காய் சட்னியை பொதுவாக தமிழ்நாட்டிலேயே மாவட்டத்திற்கு ஏற்ப வித்தியாசமாக செய்வோம். அந்த வகையில் மாநிலங்களுக்கு ஏற்பவும் தேங்காய் சட்னி செய்யும் முறை மாறுபடும்.
கர்நாடக ஹோட்டல்களில் சாப்பிட்டவர்களுக்கு அங்கு பரிமாறப்படும் தேங்காய் சட்னி பற்றி நன்கு தெரிந்திருக்கும். கர்நாடக ஹோட்டல்களில் தேங்காய் சட்னியில் இட்லி மிதக்கும்படி கொடுப்பார்கள். தண்ணி பதத்தில் இருக்கும் இந்த தேங்காய் சட்னி சிறிதளவு இனிப்புடன் சாப்பிடுவதற்கு சூப்பராக இருக்கும். இந்த பதிவில் கர்நாடகா ஸ்டைல் தண்ணீர் தேங்காய் சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- தேங்காய் துருவல் - 1/2 கப்
- பொட்டுக்கடலை - 1/4 கப்
- பச்சை மிளகாய் - 3 முதல் 5
- புளி - சிறிய துண்டு
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- பூண்டு - 2 பற்கள்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- புதினா - சிறிதளவு
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
- மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
- உப்பு - தேவைக்கேற்ப
- சர்க்கரை - ஒரு சிட்டிகை
- தண்ணீர் - அரைத்து சட்னியில் கலக்க தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ஸ்பூன்
- வர மிளகாய் - 1
செய்முறை:
- தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, பூண்டு, புளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, புதினா இலைகள், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், சர்க்கரை, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்துக் கொள்ளவும்.
- இந்த கலவையை கெட்டியாக, கரடுமுரடான பேஸ்டாக அரைக்கவும். இதற்காக, மிக்ஸியை சிறிய இடைவெளியில் இயக்கவும். தொடர்ந்து அரைத்தால் சட்னி பேஸ்ட் போல மாறிவிடும். அரைத்த பிறகு இங்கும் கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவை தெரியும் படி இருக்க வேண்டும். இல்லையெனில் சட்னியை எல்லாம் அரைத்த பிறகு, கடைசியாக பச்சை இலைகளைச் சேர்த்து அரைக்கவும்.
- ஒரு பெரிய பாத்திரத்தில் கெட்டியான சட்னியை எடுத்துக் கொள்ளவும், இதை அப்படியே கடுகு, உளுந்தம்பருப்பு, சிவப்பு மிளகாய் சேர்த்து தாளித்து சட்னி மீது ஊற்றி கெட்டி சட்னியாக பரிமாறலாம்.
- கர்நாடக ஸ்டைல் சட்னிக்கு இதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி அதற்கு பின் தாளிக்கவும். 1/4 கப் அல்லது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உங்களுக்குப் பிடித்தபடி தண்ணீர் பதத்திற்கு மாற்றுங்கள்.
- நன்றாகக் கலந்து, தேவைப்பட்டால் உப்பு சேர்த்து, இட்லி, வடை,
தோசை மற்றும் உப்புமாவுடன் பரிமாறவும்.
இதன் சுவை சூப்பராக இருக்கும்!



Click it and Unblock the Notifications