Latest Updates
-
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
நார்த் கர்நாடகா தேங்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
வெங்காயம், தக்காளி இருந்தா போதும்.. இப்படி குருமா செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்..
இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும்... வாழைத்தண்டு சட்னி
இதுவரை நீங்கள் எத்தனையோ சட்னிகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் வாழைத்தண்டு கொண்டு சட்னி செய்து சாப்பிட்டுள்ளீர்களா? ஆம், வாழைத்தண்டு கொண்டு சட்னி செய்யலாம்.
இதுவரை நீங்கள் எத்தனையோ சட்னிகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் வாழைத்தண்டு கொண்டு சட்னி செய்து சாப்பிட்டுள்ளீர்களா? ஆம், வாழைத்தண்டு கொண்டு சட்னி செய்யலாம். இந்த வாழைத்தண்டு சட்னி இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் தொற்று உள்ளவர்கள் உட்கொள்வது நல்லது. இது தவிர அசிடிட்டி, மலச்சிக்கல் பிரச்சனையை சந்திப்பவர்களும் சாப்பிடலாம்.

உங்களுக்கு வாழைத்தண்டு சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைத்தண்டு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சட்னி செய்வதற்கு...
* வாழைத்தண்டு - 1 கப் (நறுக்கியது)
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* கல் உப்பு - 1/2 டீஸ்பூன்
* புளி - 1 சிறிய துண்டு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் வாழைத்தண்டை வெட்டி, மோரில் போட வேண்டும். இதனால் வாழைத்தண்டு நிறம் மாறாமல் இருக்கும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை, துவரம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து குறைவான தீயில் வைத்து, பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி, பின் அதில் வாழைத்தண்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சிறிது உப்பு மற்றும் புளியை சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* அடுத்து சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றினால், சுவையான வாழைத்தண்டு சட்னி தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications