Latest Updates
-
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
Banana Roti Recipe : வாழைப்பழ ரொட்டி
சப்பாத்திக்கு தயார் செய்யும் போது, வீட்டில் வாழைப்பழம் மற்றும் பால் இருந்தால், அதையும் சேர்த்து சப்பாத்தி செய்யுங்கள். இப்படி சப்பாத்தி செய்தால் சப்பாத்தி நீண்ட நேரம் மென்மையாக இருக்கும்.
நீங்கள் செய்யும் சப்பாத்தி மென்மையாக இருக்காதா? எவ்வளவு மென்மையாக பிசைந்தாலும் சப்பாத்தி மென்மையாக இருப்பதில்லையா? அப்படியானால் ஓர் சிம்பிளான டிப்ஸ் சொல்றோம். அந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுணா சப்பாத்தி மென்மையாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். அது என்னவென்றால் சப்பாத்திக்கு தயார் செய்யும் போது, வீட்டில் வாழைப்பழம் மற்றும் பால் இருந்தால், அதையும் சேர்த்து சப்பாத்தி செய்யுங்கள். இப்படி சப்பாத்தி செய்தால் குழந்தைகள் அந்த சப்பாத்தியை விரும்பி சாப்பிடுவதோடு, சப்பாத்தியும் நீண்ட நேரம் மென்மையாக இருக்கும்.

உங்களுக்கு இந்த வாழைப்பழ சப்பாத்தி/வாழைப்பழ ரொட்டியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பழ ரொட்டி/சப்பாத்தியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கனிந்த வாழைப்பழம் - 1 (பெரியது, தோலுரித்தது)
* கோதுமை மாவு - 3 கப்
* பால் - 1/2 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்
* நெய் - 1 முதல் 2 டேபிள் ஸ்பூன் + தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் வாழைப்பழத்தை போட்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பால், உப்பு, நெய் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* பின்பு அதில் கோதுமை மாவு சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை 30 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* பின் மாவை மீண்டும் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் ஒரு சப்பாத்தியைப் போட்டு முன்னும் பின்னும் நெய்யைத் தடவி திருப்பிப் போட்டு, இருபுறமும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் தேய்த்து சப்பாத்தியாக போட்டு எடுத்தால், வாழைப்பழ ரொட்டி/வாழைப்பழ சப்பாத்தி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
