Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
4 வாழைப்பழமும் 1 முட்டையும் இருந்தா.. ஈவ்னிங் இட்லி தட்டில் இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. செமயா இருக்கும்...
Banana Pancake Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வீட்டிற்கு வரும் குழந்தைகளின் பசியை போக்க, ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் எண்ணெயில் பொரிக்காமல் ஸ்நாக்ஸ் செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் வாழைப்பழமும், முட்டையும் இருக்கா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அற்புதமான சுவையில் ஒரு பேன்கேக் செய்யுங்கள். இந்த கேக் சுவையாக இருப்பதாடு, பசியையும் அடக்கும், சத்தானதும் கூட.

உங்களுக்கு வாழைப்பழ பேன்கேக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பழ பேன்கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நன்கு கனிந்த வாழைப்பழம் - 4
* சர்க்கரை - 1/2 கப்
* முட்டை - 1
* உப்பு - 2 சிட்டிகை
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 1/4 கப்
* கோதுமை மாவு - 1 கப்
* பேக்கிங் பவுடர்- 1 டீஸ்பூன் அல்லது பேக்கிங் சோடா - 1/2
டீஸ்பூன்
* காய்ச்சிய பால் - 1/4 கப்
* டூட்டி ஃபுரூட்டி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நன்கு கனிந்த வாழைப்பழத்தை எடுத்து,
அதை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் 1/2 கப் சர்க்கரை மற்றும் 1 முட்டையை உடைத்து ஊற்ற
வேண்டும்.
* அதன் பின் அதில் உப்பு, ஏலக்காய் தூள், 1/4 கப் எண்ணெய் ஊற்றி நன்கு
பீட்டர் கொண்டு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் கோதுமை மாவு சேர்த்து, அத்துடன் பேக்கிங் பவுடர் அல்லது
பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
* பிறகு அதில் காய்ச்சி குளிர வைத்துள்ள பாலை 1/4 கப் ஊற்றி நன்கு
கட்டிகளின்றி கிளறி விட வேண்டும்.
* பின்பு ஒரு நான்ஸ்டிக் கடாய் அல்லது இட்லி பாத்திரத்தை அடுப்பில்
வைத்து, அதனுள் ஒரு ஸ்டாண்ட்டை வைத்து, மூடி வைத்து, குறைவான தீயில்
வைத்து 10 நிமிடம் சூடேற்ற வேண்டும்.
* பின் ஒரு இட்லி தட்டை எடுத்து, அதன் குழிகளில் எண்ணெய் தடவி, கலந்து
வைத்துள்ள மாவை ஊற்றி, மேலே சிறிது டூட்டி ஃபுரூட்டியைத் தூவி, கடாய்
அல்லது இட்லி பாத்திரத்தில் வைத்து, 20-25 நிமிடம் குறைவான தீயில்
வைத்து மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* 20-25 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, டூத் பிக் கொண்டு
வெந்துவிட்டதா என்று பார்த்து, வெந்துவிட்டால், அதை இறக்கி 5-10
நிமிடம் குளிர வைத்து, பின் கரண்டியால் எடுத்தால், சுவையான வாழைப்பழ
பேன்கேக் தயார்.



Click it and Unblock the Notifications