Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
2 வாழைப்பழமும் 1 கப் அரிசி மாவும் இருந்தா.. ஈவ்னிங் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Banana Kozhukattai Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் வாய்க்கு ருசியாக ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? அப்போது அவர்களுக்கு எண்ணெயில் பொரித்த வடை, பஜ்ஜி, போண்டா போன்றவற்றை செய்து கொடுப்பதற்கு பதிலாக, வாழைப்பழமும், பச்சரிசி மாவும் இருந்தால், அவற்றைக் கொண்டு ருசியான கொழுக்கட்டையை செய்து கொடுங்கள்.
இந்த வாழைப்பழ கொழுக்கட்டை செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். இந்த கொழுக்கட்டையை ஒருமுறை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள். முக்கியமாக இந்த வாழைப்பழ கொழுக்கட்டை ருசியானது மட்டுமின்றி, சத்தானதும் கூட.

உங்களுக்கு வாழைப்பழ கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பழ கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 1 டீஸ்பூன்
* முந்திரி - 15 (பொடியாக நறுக்கியது)
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சர்க்கரை - 1/2 கப்
* அரிசி மாவு - 1 கப்
* நன்கு கனிந்த நேந்திரம் வாழைப்பழம் - 2
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - 1 சிட்டிகை
செய்முறை:
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் 1/2 கப் சர்க்கரை சேர்த்து உருகும் வரை நன்கு
வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரிசி மாவை
சேர்த்து நல்ல மணம் வரும் வரை 2 நிமிடம் வறுத்து இறக்க வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் நேந்திரம் பழத்தை சேர்த்து கைகளால் நன்கு
மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் வறுத்து வைத்துள்ள அரிசி மாவை சேர்த்து, 1 சிட்டிகை
உப்பு சேர்த்து, நீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து சப்பாத்தி மாவு
பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு பிசைந்த மாவை கொஞ்சம் எடுத்து உருட்டி, தட்டையாக தட்டி அதன்
நடுவே செய்து வைத்துள்ள தேங்காய் பூரணத்தை வைத்து, மூடி நன்கு விரிசல்
இல்லாமல் உருட்டிக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும்
உருட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக இட்லி பாத்திரத்தில் அந்த உருண்டைகளை வைத்து, 10 நிமிடம்
வேக வைத்து எடுத்தால், சுவையான வாழைப்பழ கொழுக்கட்டை தயார்.



Click it and Unblock the Notifications











