Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
தீபாவளி ஸ்பெஷல்: வாழைப்பழ அல்வா
இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு இதுவரை செய்திராத ஒரு ஸ்வீட் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வாழைப்பழத்தைக் கொண்டு ஒரு ஸ்வீட் செய்யுங்கள். அது தான் வாழைப்பழ அல்வா.
தீபாவளி பண்டிகையின் போது உங்கள் வீட்டில் பலகாரம் செய்வீர்களா? இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு இதுவரை செய்திராத ஒரு ஸ்வீட் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வாழைப்பழத்தைக் கொண்டு ஒரு ஸ்வீட் செய்யுங்கள். அது தான் வாழைப்பழ அல்வா. உங்கள் வீட்டில் உள்ளோருக்கு அல்வா மிகவும் பிடிக்குமானால், அவர்களுக்கு வாழைப்பழத்தைக் கொண்டு அல்வா செய்து கொடுங்கள். இந்த வாழைப்பழ அல்வா நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு வாழைப்பழ அல்வா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பழ அல்வா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வாழைப்பழம் - 5 மசித்தது அல்லது அரைத்தது
* சர்க்கரை - 1/4 கப் + 1 கப்
* நெய் - 1/2 கப் முதல் 3/4 கப்
* ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப்
* பாதாம், முந்திரி, திராட்சை - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பேனில் நெய் தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு நாண்ஸ்டிக் பேனில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அதில் அரைத்த அல்லது மசித்த வாழைப்பழத்தை சேர்த்து கிளறி, 1/4 கப் சர்க்கரை சேர்த்து நன்கு வெந்து ஓரளவு கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும்.
* அதே வேளையில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை மற்றும் 1/4 கப் நீரை ஊற்றி கிளறி கொதிக்க வைக்க வேண்டும். சர்க்கரை பாகானது கேரமல் நிலைக்கு/ப்ரௌன் நிறத்தில் மாறி வரும் போது, அதில் வாழைப்பழத்தை சேர்த்து கிளறி தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* அப்போது அதில் தேவையான அளவு நெய் ஊற்றி கிளறி விட வேண்டும்.
* அதே வேளையில், ஒரு வாணலியை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், பாதாம், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து வறுத்து அல்வாவில் ஊற்றி கிளறி, அத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதை இறக்கி, நெய் தடவிய பேனில் ஊற்றி பரப்பி, குளிர வைத்து, பின் அதை துண்டுகளாக்கினால், சுவையான வாழைப்பழ அல்வா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications