Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் வெச்சு ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணி பாருங்க..
Banana Bread Bajji Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் குழந்தைகளுக்கு பஜ்ஜி என்றால் பிடிக்குமா? அப்படியானால் எப்போதும் போன்று கடலை மாவைக் கொண்டு பஜ்ஜி செய்யாமல் ஒருமுறை வித்தியாசமான சுவையில் பஜ்ஜியை செய்யுங்கள்.
அதுவும் வீட்டில் பிரட், வாழைப்பழம் மற்றும் கோதுமை மாவு இருந்தால், அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் பஜ்ஜி செய்யுங்கள். இந்த வாழைப்பழ பிரட் பஜ்ஜி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். முக்கியமாக இந்த பிரட் பஜ்ஜியை மாலை வேளையில் ஸ்நாக்ஸாக மட்டுமின்றி, காலை உணவாகவும் சாப்பிடலாம். இது தவிர இந்த வாழைப்பழ பிரட் பஜ்ஜியை பள்ளிக்கு ஸ்நாக்ஸாகவும் கொடுத்து அனுப்பலாம்.

உங்களுக்கு வாழைப்பழ பிரட் பஜ்ஜியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பழ பிரட் பஜ்ஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நன்கு கனிந்த வாழைப்பழம் - 2
* கோதுமை மாவு - 1 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
* பால் - தேவையான அளவு
* சோடா உப்பு - 1 சிட்டிகை
* பிரட் - 5 துண்டுகள்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் நன்கு கனிந்த வாழைப்பழத்தை எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை மற்றும் பஜ்ஜி மாவு
பதத்திற்கு தேவையான அளவு பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் சோடா உப்பை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு பிரட் துண்டுகளை எடுத்து, அவற்றை இரு துண்டுகளாக வெட்டிக்
கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், பிரட் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, மாவில்
பிரட்டி, எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக பொரித்து
எடுத்தால், வாழைப்பழ பிரட் பஜ்ஜி தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications