Latest Updates
-
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
பக்ரீத் ஸ்பெஷல் நெல்லை ஸ்டைல் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும்
Bakrid Special Nellai Chicken Masala Recipe in Tamil: இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் பண்டிகை வரப்போகிறது. இந்த நன்னாளில் இஸ்லாமிய சகோதரர்கள் பல்வேறு அசைவ உணவுகளை சமைத்து பகிர்ந்து கொள்வார்கள். இந்த பக்ரீத் நன்னாளில் புதிதாக செய்வதற்கு ஒரு சிக்கன் ரெசிபியைதான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். அதுதான் திருநெல்வேலி சிக்கன் தொக்கு.

இந்த திருநெல்வேலி சிக்கன் தொக்கு பூரி, சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதம் மற்றும் பிரியாணியுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த பக்ரீத் திருநாளை இந்த அட்டகாசமான திருநெல்வேலி சிக்கன் தொக்குடன் கொண்டாடுங்கள்.
உங்களுக்கு திருநெல்வேலி சிக்கன் தொக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெல்லை சிக்கன் தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று விளக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- சிக்கன் - அரை கிலோ
- சின்ன வெங்காயம் - 1 கப்
- தக்காளி - 1
- சிக்கன் மசாலா - 2 ஸ்பூன்
- மல்லித்தூள் - 2 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 2 கொத்து
- மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
அரைப்பதற்கு:
- சின்ன வெங்காயம் - 10
- வரமிளகாய் - 15
- சீரகம் - 1/2 தேக்கரண்டி
- சோம்பு - 1/2 தேக்கரண்டி
தனியாக அரைப்பதற்கு:
தேங்காய் - 1 கப்
செய்முறை:
- சிக்கனை முதலில் நன்றாக கழுவி தனியாக எடுத்து வைக்கவும்.
- முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், வர மிளகாய், சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காயை தனியாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கறிவேப்பிலை சேர்க்கவும்.
- பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.
- தக்காளி நன்கு குலைந்ததும், சுத்தம் செய்த சிக்கன் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாகக் கிளறவும்.
- இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனதும் சிக்கன் மசாலா மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- பின்னர் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.
- இப்போது மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் 2 கப் தண்ணீர் சேர்க்கவும். இதை மூடி வைத்து சிக்கன் நன்றாக வேகும் வரை சமைக்கவும். இந்த நேரத்தில் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்க்கவும்.
- சிக்கன் வெந்ததும் அரைத்த தேங்காயை சேர்த்து நன்றாக கிளறவும். மூடி வைத்து 5 நிமிடங்கள் வேகவைத்து அடுப்பிலிருந்து இறக்கவும். அவ்வளவுதான் சூப்பரான நெல்லை ஸ்டைல் சிக்கன் சுக்கா ரெடி!



Click it and Unblock the Notifications