Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பக்ரீத் ஸ்பெஷல்: மொறுமொறுப்பான.. மட்டன் கட்லெட்
Mutton Cutlet Recipe: பக்ரீத் பண்டிகை வரப்போகிறது. இந்த பக்ரீத் பண்டிகை அன்று பல சுவையான அசைவ உணவுகளை இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் சமைப்பார்கள். இந்த பக்ரீத் பண்டிகையன்று நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு சுவையான மற்றும் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் போன்ற ரெசிபியை செய்ய நினைத்தால், மட்டன் கட்லெட்டை செய்யுங்கள்.
மட்டன் கட்லெட் ஒரு நல்ல ஸ்நாக்ஸாக இருப்பதோடு, அருமையான சைடு டிஷ்ஷாகவும் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோர் மட்டன் கட்லெட்டை விரும்பி சாப்பிடுவார்களானால், இந்த பக்ரீத் பண்டிகையன்று அந்த மட்டன் கட்லெட்டை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுங்கள்.

உங்களுக்கு மட்டன் கட்லெட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் கட்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் கொத்துக்கறி - 1/2 கிலோ
* உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து தோலுரித்தது)
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* பச்சை பட்டாணி - 1 கப்
* தக்காளி கெட்சப் - 3 டேபிள் ஸ்பூன்
* முட்டை - 2
* பிரட் தூள் - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மட்டன் கொத்துக்கறியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை
மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கழுவி வைத்துள்ள கொத்துக்கறியை சேர்த்து 5 நிமிடம்
நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* கொத்துக்கறியில் உள்ள ஈரப்பதம் முற்றியும் ஆவியாகி, கொத்துக்கறி
நல்ல ப்ரௌன் நிறத்தில் மாறியதும், சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள்,
மஞ்சள் தூள், கரம் மசாலா, சீரகத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்பு பச்சை பட்டாணி மற்றும் தக்காளி கெட்சப்பை சேர்த்து கிளற
வேண்டும்.
* அதன் பின் வேக வைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து
கிளறி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/2 கப் பிரட் தூளை சேர்த்து பிசைய வேண்டும்.
* பிறகு பிசைந்த கலவையில் சிறிது எடுத்து, அதை உருட்டி தட்டையாக
தட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முதலில் முட்டையில் பிரட்டி, அதன் பின் பிரட் தூளில்
பிரட்டிக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து கலவையையும் செய்து ஒரு
தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், கட்லெட் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக
பொரித்து எடுத்தால் சுவையான மட்டன் கட்லெட் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications