Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
பக்ரீத் ஸ்பெஷல் மதுரை மட்டன் நெய் சுக்கா - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Bakrid Special Madurai Mutton Ghee Sukka Recipe In Tamil: பக்ரீத் பண்டிகை வரப்போகிறது. இந்த பக்ரீத் பண்டிகையன்று உங்கள் வீட்டில் உள்ளோருக்கு மட்டன் பிரியாணிக்கு ஒரு ஸ்பெஷலான சைடு டிஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் இதுவரை நீங்கள் உங்கள் வீட்டில் செய்திராத மட்டன் ரெசிபியை செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் மதுரை மட்டன் எண்ணெய் சுக்காவை செய்து கொடுங்கள்.
இந்த சுக்கா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ருசியாக இருக்கும். எண்ணெய் சுக்கா என்றதும், பலரும் இதில் எண்ணெய் அளவுக்கு அதிகமாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால் அது தான் இல்லை. இதில் கறிக்கு ஏற்ற அளவு தான் எண்ணெய் சேர்க்கப்படும்.

வருகிற பக்ரீத் பண்டிகையன்று வீட்டில் வரும் விருந்தினர்களின் பாராட்டை பெற விரும்பினால், இந்த சுக்காவை செய்யுங்கள். இந்த சுக்கா நீங்கள் வழக்கமாக செய்யும் சுக்காவில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது. ஒருமுறை இப்படியொரு சுக்காவை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி இந்த சுக்காவை செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.
உங்களுக்கு மதுரை மட்டன் எண்ணெய் சுக்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை மட்டன் எண்ணெய் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத மட்டன் - 1 கிலோ (சிறு துண்டுகளாக வெட்டியது)
* நல்லெண்ணெய் - 250 மிலி
* மஞ்சள் தூள் - 3/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி - 75 கிராம்
* பூண்டு - 75 கிராம்
* நெய் - 150 மிலி
* முந்திரி - 1/2 கைப்பிடி
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அகலமான வாணலியை எடுத்து, அதில் 1 கிலோ மட்டனை எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் 250 மிலி நல்லெண்ணெயை ஊற்றி, அதன் மேல் 3/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள், 4 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் இடித்து வைத்துள்ள இஞ்சியை சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் சிறிது கல் உப்பை தூவ வேண்டும்.
* பின்பு கைகளால் மட்டனை நன்கு மசாலாவுடன் சேரும் வகையில் பிரட்டி விட
வேண்டும்.
* அடுத்து அதில் மட்டன் மூழ்கும் அளவு நீரை ஊற்றி கிளறி, வாணலியை
அடுப்பில் வைத்து, குறைவான தீயில் 30-40 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
முக்கியமாக அவ்வப்போது மட்டனை கிளறி விட வேண்டும்.
* மட்டன் நன்கு வெந்ததும், அதில் தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை தூவி,
அதன் பின் நெய்யை ஊற்றி கிளறி, ஒரு 10 நிமிடம் மட்டனை வேக வைக்க
வேண்டும்.
* இறுதியாக முந்திரியை தூவி 1 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான
மதுரை மட்டன் எண்ணெய் சுக்கா தயார்.



Click it and Unblock the Notifications