ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..

Posted By:

Ayudha Pooja Masala Sundal Recipe In Tamil: ஆயுத பூஜை வரப்போகிறது. இந்த ஆயுத பூஜையின் போது சுண்டல் செய்து படைப்பது வழக்கம். இந்த சுண்டலில் பல வகைகள் இருந்தாலும், கொண்டைக்கடலையைக் கொண்டு செய்யும் சுண்டல் தான் பரவலாக செய்யப்படுகிறது. உங்கள் வீட்டிலும் ஆயுத பூஜைக்கு வெள்ளை கொண்டைக்கடலைக் கொண்டு தான் சுண்டல் செய்வீர்களா? எப்போதும் ஒரே சுவையில் தான் சுண்டலை செய்வீர்களா?

Ayudha Pooja Sundal Recipe How To Make Masala Sundal

அப்படியானால் இந்த ஆயுத பூஜைக்கு சற்று ஸ்பெஷலாக மசாலா சுண்டலை செய்யுங்கள். இந்த மசாலா சுண்டல் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, சுவை வேற லெவலில் இருக்கும். முக்கியமாக உங்கள் பிள்ளைகள் சுண்டலை அதிகம் சாப்பிடமாட்டார்களானால், இப்படி செய்து கொடுக்கும் போது கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு மசாலா சுண்டலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா சுண்டல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* வெள்ளை கொண்டைக்கடலை - 150 கிராம்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* வேக வைத்த சுண்டல்
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் வெள்ளை கொண்டைக்கடலையை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஊற வைத்த கொண்டைக்கடலையை குக்கரில் எடுத்துக் கொண்டு, அதில் கொண்டைக்கடலை மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, குறைவான தீயில் வைத்து 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, நீரை வடிகட்டிவிட்டு கொண்டைக்கடலையை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து சிறிது நேரம் வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்த சுண்டலை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லியைத் தூவி நன்கு கிளறி இறக்கினால், சுவையான மசாலா சுண்டல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, October 18, 2026, 19:35 [IST]
Desktop Bottom Promotion