Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
1 கப் அவல் இருந்தா.. ஈவ்னிங் நேரத்துல இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அள்ளும்..
Aval Vadai Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளின் பசியைப் போக்க வேண்டுமா? உங்கள் பிள்ளைகள் வடையை விரும்பி சாப்பிடுவார்களா? ஆனால் வடை செய்ய பருப்பு எதையும் ஊற வைக்கவில்லையா? கவலை வேண்டாம். வீட்டில் 1 கப் அவல் இருந்தால், அந்த அவலைக் கொண்டு அட்டகாசமான சுவையில் வடையை செய்யலாம்.
இந்த அவல் வடை மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். ஒருமுறை இந்த வடையை உங்கள் பிள்ளைகளுக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு அவல் வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அவல் - 1 கப்
* கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் 1 கப் அவலை எடுத்து நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் அதை
வடிகட்டியில் போட்டு நீரை முழுமையாக வடிகட்டி எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அந்த அவலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து, பொடியாக நறுக்கிய
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்க்க
வேண்டும்.
* அடுத்து அதில் சீரகம், மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கைகளால் கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரைத் தெளித்து, வடை மாவு
பதத்திற்கு பிசைந்து கொள்ற வேண்டும்.
* பிறகு பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி, தட்டையாக
தட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளை சேர்த்து,
முன்னும் பின்னும் பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால், சுவையான அவல்
வடை தயார்.



Click it and Unblock the Notifications