Latest Updates
-
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
1 கப் அவலும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அள்ளும்...
Aval Cutlet Recipe In Tamil: மாலை வேளையில் அதுவும் மழை பெய்யும் போது காபி, டீ குடிக்கும் வேளையில் சூடாகவும், மொறுமொறுவென்றும் ஏதாவது சாப்பிட நிச்சயம் அனைவருக்கும் தோன்றும். அந்த சமயத்தில் எப்போதும் செய்வது போன்று பஜ்ஜி, வடை, போண்டா என்று செய்யாமல், வீட்டில் அவலும், உருளைக்கிழங்கும் இருந்தால், அதைக் கொண்டு அருமையான சுவையில் கட்லெட் செய்து சாப்பிடுங்கள்.
இப்படி கட்லெட் செய்யும் போது, அது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். அதோடு இந்த கட்லெட் செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். மாலை வேளையில் பசியுடன் உள்ள பிள்ளைகளுக்கு செய்து கொடுத்தால், அவர்களின் பசியும் சட்டென்று அடங்கும்.

உங்களுக்கு அவல் கட்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் கட்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய உருளைக்கிழங்கு - 2
* அவல் - 2 கப்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* புதினா - 15 இலைகள் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* சிக்கன் மசாலா/கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சோம்புத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
கோட்டிங்ற்கு...
* மைதா - 3/4 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* கார்ன் ப்ளேக்ஸ் - சிறிது (அரைத்து பொடி செய்தது)
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை இரண்டு துண்டுகளாக்கி குக்கரில் போட்டு,
கிழங்கு ஓரளவு மூழ்கும் வரை நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில்
வைத்து, 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கிழங்கின் தோலை நீக்கிவிட்டு,
கிழங்கை கட்டிகளின்றி மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அவலை நீரில் ஒருமுறை கழுவி வடிகட்டிவிட்டு, 10 நிமிடம் மூடி
வைத்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து அவலை கைகளால் உதிர்த்து விட வேண்டும்.
* பின்பு அதில் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து, அத்துடன் பொடியாக
நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய புதினா
இலைகள், பச்சை மிளகாய், கொத்தமல்லி, மிளகாய் தூள், சிக்கன் மசாலா,
மஞ்சள் தூள், சோம்பு தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கைகளால்
நன்கு பிசைந்து விட வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் மைதா மாவை எடுத்து, அதில் சிறிது நீரை
ஊற்றி கோட்டிங் கொடுக்கும் பதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் கார்ன் ப்ளேக்ஸை சேர்த்து பொடித்து, அதை ஒரு
தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் பிசைந்த உருளைக்கிழங்கு கலவையில் இருந்து கொஞ்சம் எடுத்து
உருட்டி, கட்லெட் போன்று தட்டையாக தட்டி, மைதா மாவில் பிரட்டி, கார்ன்
ப்ளேக்ஸில் ஒருமுறை பிரட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதேப் போன்று அனைத்து கலவையையும் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு
தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும் தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை எண்ணெய் போட்டு,
குறைவான தீயில் வைத்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக ப்ரை செய்து
எடுத்தால், சுவையான அவல் கட்லெட் தயார்.



Click it and Unblock the Notifications