Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
1 கப் அவல் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு சாப்பிடுங்க.. செமயா இருக்கும்...
Crispy Aval Cutlet Recipe In Tamil: தற்போது மழை பெய்து காலநிலை மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. இப்படியான சூழ்நிலையில் மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது, சூடாகவும் மொறுமொறுப்பாகவும் ஏதாவது சாப்பிட தோன்றும்.
அப்போது வீட்டில் உள்ள வெங்காயம், உருளைக்கிழங்கு கொண்டு பஜ்ஜி, போண்டா என்று தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் சற்று வித்தியாசமாக சாப்பிட தோன்றுகிறதா? உங்கள் வீட்டில் 1 கப் அவல் இருந்தால், அதைக் கொண்டு கட்லெட் செய்து சாப்பிடுங்கள். இந்த கட்லெட் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும்.

உங்களுக்கு அவல் கட்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் கட்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அவல் - 1 கப்
* வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மைதா - 1/4 கப்
* தண்ணீர் - பேஸ்ட் செய்ய தேவையான அளவு
* பிரட் தூள் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் அவலை எடுத்து, நீரில் ஒருமுறை அலசி,
நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, மூடி வைத்து 5 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அவலை கைகளால் உதிர்த்துவிட
வேண்டும்.
* பின்பு வேக வைத்து தோலுரித்த உருளைக்கிழங்கை நன்கு கட்டிகளின்றி
மசித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அவலுடன் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து,
அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி,
கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், சீரகம், மிளகாய் தூள், கரம்
மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கைகளால் கிளறி விட
வேண்டும்.
* அடுத்து அந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி, கட்லெட்
போன்று விரிசல் இல்லாமல் தட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு அகலமான கிண்ணத்தில் மைதா மாவு மற்றும் சிறிது நீரை ஊற்றி
கட்டிகளின்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒவ்வொரு கட்லெட்டையும் எடுத்து, மைதா கலவையில் பிரட்டி,
பின் பிரட் தூளில் பிரட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதேப் போன்று அனைத்து கட்லெட்டுகளையும் செய்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கட்லெட்டுகளைப் போட்டு, மிதமான தீயில்
வைத்து, பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால், சுவையான அவல் கட்லெட்
தயார்.



Click it and Unblock the Notifications











