Latest Updates
-
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்..
அஸ்ஸாம் ஸ்டைல் அட்டகாசமான தக்காளி சட்னி ரெசிபி... இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க... டேஸ்ட் தாறுமாறா இருக்கும்...!
Assamese Tomato Chutney Recipe in Tamil: தினமும் வீட்டில் காலை அல்லது இரவு இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி செய்வது பெரும்பாலான வீடுகளில் வழக்கமாகிவிட்ட ஒன்று. அதற்கும் விதவிதமாய் வித்தியாசமாய் சட்னி குழம்பு வகைகளை செய்வது என்பது தினமும் தொடரும் போராட்டமாக இருக்கும். என்ன தான் சைடிஷை சுவையாக செய்தாலும் நாளடைவில் அது அலுப்பு தட்டிவிடும். அதற்கு என்ன செய்ய முடியும் என்கிறீர்களா? சில பொருட்களை கூட்டி அல்லது குறைத்து சுவையை தான் மாற்ற முடியும். ஒவ்வொரு ஊரிலும் சட்னிகளின் சுவை வேறுபட காரணம் இதுதான்.
பொதுவாக தக்காளி சட்னி என்பது இட்லி, தோசைக்கு சைடிஷாக செய்யப்படும் ஒரு தரமான சைடிஷாகும். இந்தியா பலவிதமான உணவு வகைகளைக் கொண்ட ஒரு நாடு. இங்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனித்துவமான சுவை உண்டு. அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப்போவது அஸ்ஸாம் ஸ்டைல் தக்காளி சட்னி. இந்த கண்கவர் அஸ்ஸாம் ஸ்டைல் தக்காளி சட்னி என்பது தமிழ்நாடு தக்காளி சட்னியுடன் ஒப்பிடும் போது மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். இந்த அஸ்ஸாம் ஸ்டைல் தக்காளி சட்னி இட்லி, தோசைக்கு அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு அஸ்ஸாம் ஸ்டைல் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அஸ்ஸாம் ஸ்டைல் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 6 பழுத்த தக்காளி (பொடியாக நறுக்கியது)
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1/2 டீஸ்பூன் சர்க்கரை
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
- கால் ஸ்பூன் கடுகு
- கால் ஸ்பூன் சீரகம்
- ஒரு சிட்டிகை வெந்தயம்
- 1 பிரியாணி இலை
- 1 வர மிளகாய்
செய்முறை:
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்
- எண்ணெய் காய்ந்ததும் கடுகை பொட்டு தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் வர மிளகாய், சீரகம், வெந்தயம் மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளியை கடாயில் சேர்க்கவும்.
- தக்காளி பாதி வெந்ததும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
- இதை மூடி வைத்து 5 முதல் 10 நிமிடம் வரை வேக வைக்கவும். இடையிடையே நன்றாக கிளறி விடவும்.
- தக்காளி ஈரப்பதம் முழுவதும் வற்றி எண்ணெய் ஓரத்தில் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- இறுதியாக உப்பு சரிபார்த்து அடுப்பை அணைக்கவும். அவ்வளவுதான் வித்தியாசமான அஸ்ஸாம் ஸ்டைல் தக்காளி சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications