Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
வீட்டுல யாரும் கீரை சாப்பிடமாட்டாங்களா? அப்ப இப்படி கீரை செய்யுங்க.. போட்டி போட்டு சாப்பிடுவாங்க..
Araikeerai Poriyal Recipe In Tamil: மதிய வேளையில் சாதத்திற்கு ஏதாவது பொரியல் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் கீரை பொரியலை அதிகம் விரும்பி சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அடுத்தமுறை அரைக்கீரை வாங்கி இப்படி பொரியல் செய்யுங்கள். இதனால் கீரை பிடிக்காதவர்களும் போட்டிப் போட்டு சாப்பிடுவார்கள்.
முக்கியமாக இந்த கீரை பொரியல் 10 நிமிடத்தில் டக்கென்று செய்யக்கூடிய வகையில் சுலபமாக இருக்கும். மேலும் இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த கீரை பொரியலை சாதத்துடனும் பிசைந்து சாப்பிடலாம்.

உங்களுக்கு அரைக்கீரை பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரைக்கீரை பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பூண்டு - 15 சிறிய பல்
* அரைக்கீரை - 1 கட்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் அரைக்கீரையை பொடியாக நறுக்கி, நீரில் அலசி தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து
தாளித்து, பருப்புக்கள் பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு பூண்டின் பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கழுவி வைத்துள்ள கீரையை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும். எப்போதும் கீரையை மூடி வைத்து வேக வைக்கக்கூடாது. அப்படி
வேக வைக்கும் போது கீரையின் நிறம் மாறிவிடும். எனவே திறந்து வைத்தே
கீரையை வேக வையுங்கள்.
* கீரையானது சற்று சுருங்கி பாதியளவு வெந்ததும், சிறிது உப்பு
சேர்த்து நன்கு கிளறி விட்டு, கீரையை முழுமையாக வேக வைக்க
வேண்டும்.
* கீரை முழுமையாக வெந்ததும், துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து
கிளறி இறக்கினால், சுவையான அரைக்கீரை பொரியல் தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications