Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
மட்டன் எடுத்தா.. இப்படி அரைச்சுவிட்ட மட்டன் கிரேவியை செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
Arachuvitta Mutton Gravy Recipe In Tamil: இந்த வார விடுமுறை நாளில் உங்கள் வீட்டில் மட்டன் செய்யப் போகிறீர்களா? எப்போதும் மட்டனை ஒரே சுவையில் தான் செய்வீர்களா? அப்படியானால் இந்த வாரம் சற்று வித்தியாசமான முறையில் செய்யுங்கள். அதுவும் அரைத்துவிட்ட மட்டன் கிரேவியை செய்யுங்கள்.
இந்த கிரேவி இட்லி, சப்பாத்தி, பூரியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். மேலும் இந்த மட்டன் கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். ஒருமுறை இந்த ஸ்டைலில் கிரேவியை செய்தால், பின் அடிக்கடி இந்த சுவையில் செய்ய சொல்லி கேட்பார்கள்.

உங்களுக்கு அரைத்துவிட்ட மட்டன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரைத்துவிட்ட மட்டன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மல்லி - 2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* ஜாதிபத்திரி - 1 சிறிய துண்டு
* கல்பாசி - சிறிய துண்டு
* கிராம்பு - 5
* ஏலக்காய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 10 பல்
* சின்ன வெங்காயம் - 15 (நறுக்கியது)
* தேங்காய் - 1/4 மூடி
கிரேவிக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 3 (நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* மட்டன் - 1 1/4 கிலோ
* குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், மிளகு, சீரகம், மல்லி, சோம்பு, பட்டை, ஜாதிபத்திரி,
கல்பாசி, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு
ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி
பதத்திற்கு வரும் வரை வதக்கி இறக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் 1/4 மூடி தேங்காயை துண்டுகுளாக்கி சேர்த்து
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் வதக்கி குளிர வைத்துள்ள பொருட்களை சேர்த்து, சிறிது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
பட்டை, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள்
மற்றும் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் கொத்தமல்லியைத் தூவி வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து 1 நிமிடம் நன்கு
வதக்க வேண்டும்.
* பிறகு குழம்பு மிளகாய் தூளை சேர்த்து நன்கு கிளறி விட்டு, அரைத்து
வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 1 நிமிடம் கிளறி, கிரேவிக்கு தேவையான
அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கினால்,
சுவையான அரைத்துவிட்ட மட்டன் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications
