Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
4 கத்திரிக்காய் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. இட்லி, தோசை, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் வெச்சுக்கலாம்
Aracha Kathirikai Gravy Recipe In Tamil: ஒவ்வொரு நாள் காலை விடியும் போதும், காலை டிபனுக்கு என்ன செய்வது என்று முடிவெடுப்பது பெரிய வேலையாக உள்ளதா? அதுவும் இட்லி, தோசை காலை டிபனாக இருந்தால், சட்னி தான் பெரும்பாலும் செய்வீர்களா? ஆனால் வீட்டில் 4 கத்திரிக்காய் இருந்தால், அதைக் கொண்டு அருமையான சுவையில் அரைச்ச கத்திரிக்காய் கிரேவியை செய்யலாம்.
இந்த கிரேவி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, இட்லி, தோசை, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். அந்த அளவில் ருசியாக இருக்கும். ஒருமுறை இப்படி கத்திரிக்காயை செய்தால், பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு அரைச்ச கத்திரிக்காய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரைச்ச கத்திரிக்காய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 15
* பூண்டு - 5 பல்
* பச்சை மிளகாய் - 3
* தக்காளி - 2 (நறுக்கியது)
* கத்திரிக்காய் - 1/4 கிலோ (நறுக்கியது)
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - 1 டம்ளர்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை
மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் கத்திரிக்காயை சேர்த்து கிளறி, மூடி வைத்து 2 நிமிடம்
கத்திரிக்காயை நன்கு வேக வைக்க வேண்டும்.
* கத்திரிக்காய் வெந்ததும், அதில் புளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள்,
மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம்
கிளறி விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 1 டேபிள்
ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அரைத்ததை சேர்த்து, 1 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 5
நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைத்து இறக்கினால், அரைச்ச
கத்திரிக்காய் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications