Latest Updates
-
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்!
4 அப்பளம் இருந்தா.. இப்படி செய்யுங்க.. சாதம், டிபன்-ன்னு எல்லாத்துக்கும் செமயா இருக்கும்..
Appala Thuvaiyal Recipe In Tamil: நீங்கள் இதுவரை எத்தனையோ சைடு டிஷ்களை ட்ரை செய்திருப்பீர்கள். அதுவும் மதிய வேளையில் சாதத்திற்கு சைடு டிஷ்ஷாக பொரியல், வறுவல் என்று செய்திருப்பீர்கள். சில சமயங்களில் எதுவும் இல்லாத நேரத்தில் துவையலை செய்து சாப்பிடுவோம். உங்கள் வீட்டிலும் அப்படி அடிக்கடி துவையல் செய்து சாப்பிடுவீர்களா? அதுவும் ஒரே மாதிரியான துவையலை தான் செய்வீர்களா?
அப்படியானால் ஒருமுறை வித்தியாசமான துவையலை செய்யுங்கள். அதுவும் அப்பளம் இருந்தால், அந்த அப்பளத்தைக் கொண்டு ருசியான துவையல் செய்யுங்கள். இந்த அப்பள துவையல் இட்லி, தோசை போன்றவற்றுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். சொல்லப்போனால் இந்த துவையல் அப்பளத்தில் செய்தது என்று சொன்னால் நம்பமாட்டார்கள். அந்த அளவில் சுவை வித்தியாசமாக இருக்கும்.

உங்களுக்கு அப்பள துவையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அப்பள துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 4 ஸ்பூன்
* அப்பளம் - 4
* தேங்காய் - 2 சில்லு
* சின்ன வெங்காயம் - 10
* வரமிளகாய் - 3
* புளி - சிறிதளவு
* கறிவேப்பிலை - 2 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், 4 அப்பளத்தை நொறுக்கி போட்டு, ப்ரை செய்து, ஒரு
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் 2 சில்லு தேங்காயை துண்டுகளாக்கி சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த தேங்காயை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் சின்ன வெங்காயம், வரமிளகாய், சிறிது புளி,
கறிவேப்பிலை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து, ஒருமுறை அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி, துவையல் போன்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* இப்போது சுவையான அப்பள துவையல் தயார்.



Click it and Unblock the Notifications
