Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
வெறும் 4 அப்பளம் இருந்தா போதும்.. மதியம் டக்குன்னு சூப்பர் குழம்பு செய்யலாம்.. எப்படின்னு பாருங்க...
Appala Kulambu Recipe In Tamil: மதியம் சமைக்க வீட்டில் காய் எதுவும் இல்லையா? அதே சமயம் டக்கென்று மதிய சமையலை முடிக்க வேண்டுமா? உங்கள் வீட்டில் அப்பளம் இருக்கா? அப்படியானால் அந்த அப்பளத்தைக் கொண்டு அட்டகாசமான சுவையில் குழம்பு செய்யுங்கள்.
இந்த அப்பள குழம்பு 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். மேலும் இது சூடான சாதத்துடன், நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு அப்பள குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அப்பள குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அப்பளம் - 4-6
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பூண்டு - 5-8 பல்
* சின்ன வெங்காயம் - 15
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக்
கொள்ளவும்)
* வெல்லம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊ0ற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், அப்பளத்தைப் போட்டு பொரித்து ஒரு தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் உள்ள எண்ணெயில் கடுகு, வெந்தயம் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் மற்றும் தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 2 நிமிடம் மிதமான தீயில் வைத்து கிளறி
விட வேண்டும்.
* பின் அதில் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை சேர்த்து, தேவையான
அளவு நீரை ஊற்றி, நன்கு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் பொரித்து வைத்துள்ள அப்பளத்தை நொறுக்கி சேர்த்து, 2 நிமிடம்
கொதிக்க வைத்து, வெல்லத்தை சேர்த்து, கறிவேப்பிலை தூவி கிளறி
இறக்கினால், சுவையான அப்பள குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications