Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
5 அப்பளம் இருந்தா.. மதியம் இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
Appala Kootu Recipe In Tamil: மதிய வேளையில் சாதத்திற்கு ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? ஆனால் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? உங்கள் வீட்டில் அப்பளம் உள்ளதா? அப்படியானால் அந்த அப்பளத்தைக் கொண்டு குறைவான நேரத்தில் அட்டகாசமான சுவையைக் கொண்ட கூட்டு செய்யுங்கள். இந்த அப்பள கூட்டு புளிக்குழம்புடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.
உங்களுக்கு அப்பள கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அப்பள கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* கடலைப்பருப்பு - 1/4 கப்
* தண்ணீர் - 1 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 2 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
கூட்டு செய்வதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/2
* உளுத்தம் பருப்பு - 1/2
* சீரகம் - 1/2
* வரமிளகாய் - 3
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4 பல் (தட்டிக் கொள்ளவும்)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சிறிது
* சுடுதண்ணீர் - 3/4 கப்
* பொரித்த அப்பளம் - 5-7
செய்முறை:
* முதலில் கடலைப் பருப்பை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் அதில்
நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குக்கரில் ஊற வைத்த கடலைப்பருப்பில் உள்ள நீரை
வடிகட்டிவிட்டு, பருப்பை மட்டும் சேர்த்து, அதில் 1 கப் நீரை ஊற்றி,
மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, மிதமான தீயில்
வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை லேசாக மசித்து விட
வேண்டும்.
* பின் அதில் துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து, அத்துடன்
சாம்பார் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில்
வைத்து, 1 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தட்டி வைத்துள்ள பூண்டு
பற்கள், கறிவேப்பிலை மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வெங்காயம்
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் குக்கரில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து, அத்துடன்
3/4 கப் சுடுநீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* கூட்டு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பொரித்து வைத்துள்ள அப்பளத்தை
நொறுக்கி சேர்த்து கிளறி, அடுப்பை அணைத்துவிட்டு, மேலே கொத்தமல்லியைத்
தூவி கிளறினால், சுவையான அப்பள கூட்டு தயார்.



Click it and Unblock the Notifications